ஆஹா.. இந்தப் பக்கம் துரைமுருன்.. நடுவில் டிஆர்பி ராஜா.. அந்தப் பக்கம் ஓபிஆர்.. அரிய காட்சி!
Recommended Video
தேனி: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது பொதுகணக்கு குழுவின் தலைவர் துரைமுருகனுடன் தேனி தொகுதி அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் சந்தித்து பேசினர்.
திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகனை தலைவராக கொண்டு தமிழக சட்டசபை பொதுகணக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தகுழுவில் எம்எல்ஏக்கள் உதயசூரியன், கீதா, ஆர். நட்ராஜ், வி.பி.பி. பரமசிவம், பழனிவேல் தியாகராஜன், கே.பி.பி.பாஸ்கர், கே.ஏ.எம். அகமது, அபுபக்கர், கே.மோகன், டி.ஆர்.பி. மோகன் உள்ளிட்டோர் உள்ளனர், இந்த குழுவினரும், அதிகாரிளும் நேற்று ஆய்வுக்காக தேனிக்கு வந்தனர்.

தேனியில் ஆய்வு
இந்த குழுவினர் வைகை அணைக்கு சென்று அங்கிருந்து உசிலம்பட்டி 58ம் கால்வாய் திட்டத்தை பார்வையிட்டனர். பின்னர் தேனி அருகே முல்லை நகரில் உள்ள அங்கன்வாடி மையம், அரண்மனைப்புதூரில் உள்ள பசுமை வீடு, ஆகியவற்றை நேரில் பார்வையிட்டனர்.

ஒபி ரவீந்திரநாத் பங்கேற்பு
பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துரைமுருகன் தலைமையில் ஆய்வு குழு கூட்டம் நடந்தது. அப்போது ஒவ்வொரு துறை அதிகாரிகளிடமும் விவரங்களை கேட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டர். தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி தேவ் பங்கேற்றார். இதேபோல் தேனி மாவட்ட எம்பி என்ற முறையில் ஓபி ரவீந்திரநாத்தும் கலந்து கொண்டார்.

சிரித்து பேசினார்கள்
பின்னர் ஒபி ரவீந்திரநாத் துரைமுருகனை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவருடன் சுமார் 30 நிமிடம் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார். முன்பெல்லாம், திமுக மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் நிலை வந்தாலும் முகம் கொடுத்து பேசாமல் கடந்து சென்றுவிடுவார்கள்.அல்லது அப்படி ஒரு சந்திப்பை தவிர்ப்பார்கள்.

ஆரோக்கியமான விஷயம்
இப்போது அப்படியில்லை அரசு விழாக்கள் பலவற்றில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி அரசு விழாக்களில் பங்கேற்க அழைப்புளும் அனுப்பப்படுகிறது. இதேபோல் அதிமுகவினரும் சகஜமாக திமுக எம்எல்ஏக்களுடன் சிரித்து பேசிக்கொள்கிறார்கள். இது அரசியல் அரங்கில் ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications