Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் திமுக பக்கம் வர்றது இருக்கட்டும்.. தேனி தங்க தமிழ்ச்செல்வன்: அதிமுகவை வீழ்த்த பொன்னான சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

தேனி: தமிழக அரசியலில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நகர்வுகள் மிக முக்கியமானவை.. குறிப்பாக ஓ. பன்னீர்செல்வம் திமுக கூட்டணியை நோக்கி நகர்வதாக வெளியாகும் செய்திகள், தமிழகத்தின் தென் மாவட்ட அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.. உண்மையிலேயே ஓபிஎஸ், திமுக பக்கம் வரப்போகிறாரா? அப்படி வருவதை அவரது ஆதரவாளர்கள் ஏற்பார்களா? ஏற்கனவே திமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளபோது, தேனி நிலவரம் என்னாகும்? இதை சுருக்கமாக பார்ப்போம்.

பாஜகவை பொறுத்தவரை, ஓபிஎஸ்-ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்தி அதிமுகவை நெருங்கவே அது முயன்றது என்பதே பெரும்பாலான அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்..

Thanga Tamil Selvan in the Theni Bastion

ஆனால், எடப்பாடி பழனிசாமி காட்டும் பிடிவாதம் மற்றும் ஓபிஎஸ்-ன் தற்போதைய பலவீனம் ஆகியவற்றை கணக்கிட்டு, பாஜக அவரை ஒரு கட்டத்திற்கு மேல் கண்டுகொள்ளாமல் விட்டது என்பதே நிதர்சனம்..

தேனி ஓபிஎஸ்

அதனால்தான் அரசியல் ரீதியாக தனித்து விடப்பட்ட ஓபிஎஸ், தனது சமூக வாக்குகளையாவது தக்கவைத்துக் கொள்ளவும், தனது மகனின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்கவும் திமுக எனும் அதிகார மையத்தை அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்..

தேனி மாவட்ட அரசியலை பொறுத்தவரை, ஓபிஎஸ் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இடையேயான மோதல் நீண்ட கால வரலாறு கொண்டது.. ஏற்கனவே அதிமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் கால் பதித்து, தன்னை ஒரு முக்கியத் தலைவராக நிலைநிறுத்திக் கொண்டவர் தங்க தமிழ்ச்செல்வன்..

திமுக கூட்டணி

இப்போது அதே பாதையில் ஓபிஎஸ் வரும்போது, தேனி மாவட்டத்தில் யாருடைய கை ஓங்கும் என்ற அதிகாரப் போட்டி உருவாகும்.. ஓபிஎஸ்-க்கு திமுக தலைமை முக்கியத்துவம் கொடுத்தால், அது தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்..

அதே சமயம், இரு துருவங்களாக இருந்த இந்தத் தலைவர்கள் இணைந்தால், தேனியில் அதிமுகவின் செல்வாக்கு முற்றிலுமாகச் சிதையக்கூடும்.. ஆனால், ஒரு மாவட்டத்தில் இரு அதிகார மையங்களைச் சமாளிப்பது திமுக தலைமைக்கு பெரும் தலைவலியாகவே அமையலாம்.

ஆனால் ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வருவதால் திமுகவிற்கு பெரிய அளவிலான "பிம்ப' லாபம் எதுவும் இல்லை என்றாலும், அதிமுகவை சிதைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும்..

தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தின் ஒரு பகுதி வாக்குகளை ஓபிஎஸ் தன்வசம் வைத்திருக்கிறார்.. அந்த வாக்குகள் திமுக கூட்டணிக்கு வரும்போது, அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள் தென் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்படும்.. இது திமுகவிற்கு சாதகமான அம்சம்தான்..

தங்க தமிழ்ச்செல்வன் தேனி

அதேசமயம், நீண்ட காலம் அதிமுகவின் முகமாக இருந்த ஒருவரை ஏற்பது திமுகவின் அடிப்படைத் தொண்டர்களுக்கு மனக்கசப்பைத் தரும்.. ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி விமர்சித்த ஒருவரைப் புகலிடம் அளிப்பது கட்சியின் கொள்கை ரீதியான நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும்..

எனது பார்வையில், ஓபிஎஸ்-ன் இந்த நகர்வு ஒரு தற்காப்பு அரசியல் மட்டுமே.. பாஜக தன்னை ஒரு 'பயன்படுத்தி தூக்கி எறியும்' பொருளாக பார்த்ததை உணர்ந்துகொண்ட அவர், தனது இருப்பைத் தக்கவைக்க வேறு வழியின்றி திமுகவை நாடுகிறார்..

பொன்னான வாய்ப்பு

தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே பலமாக இருப்பதால், ஓபிஎஸ் அங்கு தனது பழைய செல்வாக்கை மீட்கப் போராட வேண்டியிருக்கும்.. இறுதியில், ஓபிஎஸ்ன் வருகை திமுகவிற்குத் தேர்தல் களத்தில் அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்க உதவுமே தவிர, திமுகவின் உட்கட்சி அரசியலில் இது ஒரு குழப்பமான சூழலையே உருவாக்கும்..

எது எப்படியோ, 2026 தேர்தல் களம் என்பது கொள்கைகளை விட, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தந்திரங்களாலேயே நிரப்பப்பட போகிறது என்பது மட்டும் உறுதி.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+