தப்பித்த ஓபிஎஸ்.. தூக்கி விட்ட போடி! டஃப் கொடுத்த தவெக! 3வது இடத்தில் அதிமுக! பரபர களம்!
தேனி: 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், போடி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக அதிமுவின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டது அரசியல் வட்டாரங்களில் பெரிய பேசுபொருளாக மாறிய நிலையில், இதனால் இந்த தொகுதி ஆரம்பத்திலிருந்தே பரபரப்பாகவே இருந்தது. இந்நிலையில் அங்கு ஓரளவு வெற்றி பெற்றுள்ளார் ஓபிஎஸ். தவெக இரண்டாம் இடத்திலிருக்கும் நிலையில், அதிமுக 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து, இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்தது.

ஆரம்ப கட்ட நிலவரங்களிலேயே போடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் தற்போது வெற்றி பெற்று உள்ளார். தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, அவர் 85206 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து தவெக வேட்பாளர் பிரகாஷ் 78401 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 41286 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலையரசு 11455வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் சுமார் 6805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.
போடிநாயக்கனூர் தொகுதியில் மொத்தம் 2,63,292 வாக்காளர்கள் உள்ள நிலையில், சுமார் 2,17,929 பேர் வாக்களித்துள்ளனர். இது 82 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவாகும். அதிக வாக்குப்பதிவு நடைபெற்றதால் இந்த தொகுதியில் வெற்றி யார் பக்கம் செல்லும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.
கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்த முறை அவர் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அரசியல் களம் முற்றிலும் மாறியது. அந்த தொகுதி வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து அரசியல் வல்லுநர்கள் ஆர்வமாக கவனித்து வந்தனர்.
தற்போது வாக்கு எண்ணிக்கையின் முடிவில், ஓபிஎஸ் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அவருக்கு தவெக வேட்பாளர் பிரகாஷ் கடும் போட்டி அளித்த நிலையில், அதிமுக 3வது இடத்துக்கு தள்ளபட்டுள்ளது.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே!












Click it and Unblock the Notifications