பிரிந்திருக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும்.. மக்களின் விருப்பம் அதுதான்.. ஓபிஎஸ் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

தேனி: தமிழ்நாடு நன்றாக் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், பிரிந்திருக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகிறார்கள் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைய பாஜக விரும்புவது பற்றிய கேள்விக்கு, இதனை பொதுக்குழு நடத்துவோரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை மட்டும் சேர்க்க ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

OPS Edappadi Palaniswami AIADMK

சில நாட்களுக்கு முன்பாக ஓபிஎஸ் டெல்லி பயணித்து அமித்ஷாவை சந்தித்திருந்தார். அதன்பின் திடீரென தனிக் கட்சி தொடங்குவதாக எப்போது கூறினேன் என்றும் ஓபிஎஸ் கூறி இருந்தார். இதையடுத்து அமித்ஷா தரப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இதன்பின் எடப்பாடி பழனிசாமியின் எண்ணங்களில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கேற்ப தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் துரோகிகளை என்று மறைமுகமாக ஓபிஎஸ் தரப்பை சாடி வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் தேனியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அதில் ஓபிஎஸ் பேசுகையில், தமிழ்நாடு நன்றாக் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், பிரிந்திருக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகிறார்கள். அதிமுக ஒன்றிணைய பாஜக விரும்புவது பற்றிய கேள்விக்கு, இதனை பொதுக்குழு நடத்துவோரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு நடந்து வரும் சூழலில் ஓபிஎஸ்ஸின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் டிசம்பர் 15ஆம் தேதி ஓபிஎஸ் முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாக கூறி இருந்தார். மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு வருவாரா அல்லது தவெக அல்லது திமுகவுடன் இணைவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+