Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிடிவி தினகரனை திடீரென சந்தித்த ஓபிஎஸ் நிழலான மா.செ - ரைட்டு.. அப்போ கூட்டணி உறுதியா?

Subscribe to Oneindia Tamil

தேனி : தேனி மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்காக தேனி சென்ற டிடிவி.தினகரனை அதிமுக தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சையது கான் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    திடீர் ட்விஸ்ட்.. டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ்ஸின் நிழல் - ரைட்டு.. அப்போ கூட்டணி உறுதியா?

    அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தினர்.

    இந்தப் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு எதிர்வினையாக, எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கினார் ஓபிஎஸ்.

    அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி

    அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி

    ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்கினார். மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலமாக கட்சியை தன்வசப் படுத்தினார் ஈபிஎஸ். இந்நிலையில், அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு தரப்பினரும், எதிர் தரப்பினரை கட்சியை விட்டு நீக்கி, அனைத்து பதவிகளுக்கும் தங்கள் ஆதரவாளர்களை நியமித்து வருகின்றனர். கட்சி தலைமை அலுவலகம் நீதிமன்ற வழக்கின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் கைக்குச் சென்றுள்ளது.

     ஒன்று சேரும் துருவங்கள்

    ஒன்று சேரும் துருவங்கள்

    தொடர்ச்சியாக பலத்த பின்னடைவுகளை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வரும் நிலையில், ஓபிஎஸ் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் கைகோர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரள்வார் என்று கூறப்பட்டு வருகிறது. அந்த யூகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சசிகலா, தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஓபிஎஸ் மகன் ஓபி.ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கண்டனம் கூட தெரிவித்தார் சசிகலா.

    திடீர் சந்திப்பு

    திடீர் சந்திப்பு

    இந்நிலையில், இன்று தேனி மாவட்ட அமமுக செயல்வீரர்கள்- வீராங்கனைகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேனி சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை அதிமுக தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சையது கான் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட செயலாளர் சையது கான், அதிமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுடன் சென்று டிடிவி.தினகரனை உற்சாகமாக வரவேற்றுள்ளது அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியுள்ளது.

     சசிகாவுக்கு ஆதரவு

    சசிகாவுக்கு ஆதரவு

    கடந்த மார்ச் மாதத்தில், தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் கூடி அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை எனக் கூறி வந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியின் மாவட்ட செயலாளர் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருந்தார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வரவேற்கத் தயார்

    வரவேற்கத் தயார்

    அதன்பிறகு, ஜூன் மாதம் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கட்சியே பிளவுபட்டுள்ள நிலையில், சையது கான் உள்ளிட்ட 6 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஓபிஸ் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், சசிகலாவையும், டிடிவி தினகரனையும் அதிமுகவில் இணைக்க வேண்டும். சசிகலாவும், தினகரனும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் இணைய வந்தால் வரவேற்கத் தயார். இது எனது சொந்த கருத்து என சமீபத்தில் கூட தெரிவித்திருந்தார் சையது கான்.

    இணையும் ஓபிஎஸ் - தினகரன்?

    இணையும் ஓபிஎஸ் - தினகரன்?

    சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கட்சியை கைப்பற்ற வேண்டும் என தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேவர் சமூகத்து அமைப்புகள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்திருக்கும் நிலையில், ஓபிஎஸ்ஸின் நிழல் போல இருக்கும் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், டிடிவி.தினகரனை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் அரங்கில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஓபிஎஸ் - டிடிவி.தினகரன் இணக்கமாகச் செயல்பட இருப்பது உறுதியாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+