தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. மண்டை மேல கொண்டையை மறந்துட்டாரே? வாரிசு அரசியலை ஒழிப்போம்.. தேனியில் முழங்கிய மோடி!

வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று தேனியில் மோடி உரையாற்றி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி காலில் விழுந்த ஓபிஎஸ் மகனும் மற்ற வேட்பாளர்களும்- வீடியோ

    தேனி: "வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி குடும்ப அரசியலை பாஜக ஒழிக்கும்" என்று தேனி கூட்டத்தில் மோடி பேசினார்.

    தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் உட்பட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேமுதிக, பாமக, தமாகா என கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று தேனி வந்திருந்தார்.

    அப்போது காங்கிரசையும், திமுகவையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கழுவி கழுவி ஊத்தினார். அப்போது மோடி பேசியதன் சுருக்கம் இதுதான்:

    சிதம்பரம் மகன்

    சிதம்பரம் மகன்

    "காங்கிரஸும் திமுகவும் என்னால் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இந்தியா வளர்வதை காங்கிரஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காங்கிரசின் நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது அவரது மகன் இந்த நாட்டை கொள்ளையடித்தார். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி குடும்ப அரசியலை பாஜக ஒழிக்கும்" என்று சொன்னார்.

    நான் கிளம்ப மாட்டேன்.. காரில் உட்கார்ந்து கொண்டு பிடிவாதம் பிடித்த நல்லகண்ணு.. வியந்த அதிகாரிகள்நான் கிளம்ப மாட்டேன்.. காரில் உட்கார்ந்து கொண்டு பிடிவாதம் பிடித்த நல்லகண்ணு.. வியந்த அதிகாரிகள்

    ஓபிஎஸ் மகன்

    ஓபிஎஸ் மகன்

    "வாரிசு அரசியலை பாஜக ஒழிக்கும்" என்று ராகுல் காந்தியைதான் மோடி சொன்னாரா? அல்லது முக ஸ்டாலினை சொன்னாரா? என தெரியவில்லை. ஆனால் டெல்லியில் இருந்து கிளம்பி வந்திருக்கிறதே ஓபிஎஸ் மகனுக்காகத்தான்! இது வாரிசு அரசியல் ஆகாதா? அதே மேடையில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் இருந்தார்? இது வாரிசு அரசியல் கிடையாதா?

    நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

    வாரிசுகள்

    வாரிசுகள்

    இதை தவிர ஜெயக்குமார் மகன், மனோஜ் பாண்டியன் மகன், இவர்கள் எல்லாம் எந்த கணக்கில் வருவார்கள் என்று தெரியவில்லை. கூட்டணியில் உள்ள ஜிகே வாசனே ஒரு வாரிசுதான்.. தமிழிசையே ஒரு வாரிசுதான்... இப்படி லிஸ்ட் பெரிசாகி கொண்டே இருக்கிறது. இருந்தாலும் மோடி மேடையை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு இதை சொல்லியிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    வைரல் பேச்சு

    வைரல் பேச்சு

    ஓபிஎஸ்-ன் வாரிசான ரவீந்திரநாத்துக்கு பிரச்சாரம் செய்த மேடையிலேயே மோடி வாரிசு அரசியலை ஒழிப்போம் எனக் கூறியுள்ளது சமூகவலைதளங்களில் திரும்பவும் ஒரு ரவுண்டு அடித்து கொண்டு வருகிறது.

    English summary
    PM Modi Campaigned in Theni for ADMK Candidate OP Raveendranath and says about Political heir
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X