‛‛உடலில் ஒட்டுத்துணி இல்லையே’’.. அதிகாலையிலே வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் அத்துமீறல்..பரபர தேனி

தேனி மாவட்டத்தில் மது போதையில் நிர்வாணமாக சுற்றியது மட்டுமின்றி வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் சோலைதேவன்பட்டியில் மது போதையில் நிர்வாணமாக சுற்றி திரிந்த நபர் வீடுகளுக்குள் புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையிலேயே போதை தலைக்கேறிய சங்கர் என்பவர் ஆடைகளை களைந்து விட்டு ஊர் மக்கள் மத்தியில் நிர்வாணமாக சுற்றி திரிந்துள்ளான்.

மது போதையில் சிலர் மிகவும் அநாகரிகமாகவும் அடாவடித்தனத்துடன் செயல்படும் போக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பது... வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்வது.. பொதுமக்களிடம் வம்பு பேசுவது என ஆங்காங்கே குடிகாரர்கள் செய்யும் அட்டகாசம் அடங்கியபாடில்லை.

போதை ஆசாமிகளின் அட்டகாசம்

போதை ஆசாமிகளின் அட்டகாசம்

இப்படித்தான் சாலையில் சென்ற பேருந்தை நேராக சென்று போதை ஆசாமி மறித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்த சம்பவம் ஒன்று கூட சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் வேகமாக பரவியது. இதுபோன்ற போதை ஆசாமிகளின் வம்பு எல்லை மீறும் போது பொதுமக்களே பிடித்து தர்ம அடி கொடுக்கவும் செய்கின்றனர். போலீசாரும் தங்கள் பாணியில் பிடித்து விசாரித்து அனுப்பினாலும் போதையில் சிலர் அநாகரிமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

நிர்வாணமாக சுற்றித்திரிந்த நபர்

நிர்வாணமாக சுற்றித்திரிந்த நபர்

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் மதுபோதையில் ஒருவர் நிர்வாணமாக பரபரப்பான சாலையில் சுற்றி திரிந்த சம்பவம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. அதோடு நிற்காமல் பெண்களுக்கு பாலியல் தொல்லையும் அந்த போதை ஆசாமி கொடுத்தது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டி அருகே உள்ள சோலை தேவன் பட்டி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் சங்கர் (வயது 40)

வீடுகளுக்குள் புகுந்து பெண்களுக்கு தொல்லை

வீடுகளுக்குள் புகுந்து பெண்களுக்கு தொல்லை

சங்கர் சொந்தமாக டிராக்டர் வண்டியை வைத்து தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகி இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், காலையிலையே மது அருந்திய சங்கர் முழு போதையில் ஆடைகளை களைந்து விட்டு பரபரப்பான சாலையில் ஊர்மக்கள் முன்னிலையில் நடந்து சென்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் முகம் சுழித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் சங்கர் சில வீடுகளுக்குள் புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

பெண்களின் அலறல் சத்தம் கேட்டதால் திரண்டு வந்த ஊர் மக்கள் சங்கரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சாதிய வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் சங்கர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். காலை நேரத்தில் மது போதையில் நிர்வாணமாக சுற்றியதோடு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க போதை ஆசாமி கொடுக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+