தேனியில் திருட்டை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கே இப்படி ஒரு நிலையா.. நள்ளிரவில் பெரிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேலகாமாக்காப்பட்டியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு இரவு ரோந்து, பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவில் பகுதியில் போடப்பட்டிருந்தது. அந்த பகுதியில் நள்ளிரவில் ரோந்து சென்றார். அப்போது இரண்டு பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை தொடர்ந்து 3 பேர் கண் இமைக்கும் நேரத்தில் வந்தனர். அப்போது என்ன நடந்தது என்பதை விவரமாக பார்ப்போம்.

பொதுவாக தமிழ்நாடு முழுவதுமே காவல் நிலையங்களில், போலீசாருக்கு இரவு நேர ரோந்து போடப்படுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி என்று ஒருவருக்கு ரோந்து பணி தருவார்கள். சில இடங்களில் இரண்டு பேர் ரோந்து செல்வார்கள். சில இடங்களில் ஒருவரே ரோந்து செல்லும் நிலையும் இருக்கும். அப்படித்தான் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையையொட்டி, கைலாசநாதர் கோவில் பகுதியில் ஒரு காவலருக்கு இரவு நேர ரோந்து போடப்பட்டிருந்தது. அவருக்கு நடந்த சம்பவம் பற்றி விரிவாக பார்ப்போம்.

Police Head Constable Robbed of Jewelry While Intervening to Prevent Theft in Theni

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேலகாமாக்காப்பட்டியை சேர்ந்த 37 வயதாகும் சசிக்குமார் என்பவர், பெரியகுளம் நகரம் தென்கரை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு நாள் முன்பு நள்ளிரவு திருட்டை தடுக்கும் வகையில் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவில் பகுதியில் ஏட்டு சசிக்குமார் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றார். அப்போது கைலாநாதர் கோவில் அடிவாரத்தில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அதை பார்த்த சசிக்குமார், அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினார். அவர்கள் கடப்பாரை மற்றும் கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை தரையில் உட்காரும்படி கூறியிருக்கிறார்.

அப்போது கோயில் அடிவார வனப்பகுதியில் பகுதியில் மறைந்திருந்த மேலும் 3 பேர் திடீரென்று வந்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சசிக்குமாரை தாக்கயதாக கூறப்பபடுகிறது. அவர்களுடன் சசிக்குமார் போராடியிருக்கிறார். பின்னர் 5 பேரும் சேர்ந்து ஆயுதங்களால் சசிக்குமாரை தாக்கி உள்ளார்கள், இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலில் அவர் நிலைகுலைந்து போயிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து அந்த மர்ம கும்பல் சசிக்குமார் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அவர் தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் பாதி சங்கிலி மட்டும் கொள்ளையர்களின் கையில் சிக்கியது. அதனுடன் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்களாம்.

இதுகுறித்து தென்கரை காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் சசிக்குமார் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு சென்ற போலீசார் சசிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டை தடுக்க ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவையே தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் பெரியகுளம் கைலாசப்பட்டி பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+