திருமண ஆசைகாட்டி பலமுறை உல்லாசம்.,. 10 வருசம் ஜெயில்... தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

தேனி: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் உறவு கொண்ட பொன்ராஜ் எனபவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்னாபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (40) இவர் ஆண்டிபட்டி பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி பகுதியை சேர்ந்த கட்டிட வேலை பார்த்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறி ஆண்டிபட்டி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ponraj sentenced to 10 years rigorous imprisonment for repeatedly rape a women: Theni court

இந்த வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2013 - ஆம் ஆண்டில் தான் திருமணம் செய்ததை மறைத்து உடன் வேலை செய்த பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் உறவு கொண்டது விசாரணையில் உறுதியானது.

ponraj sentenced to 10 years rigorous imprisonment for repeatedly rape a women: Theni court

குற்றவாளி பொன்ராஜ் எனபவருக்கு 10 ஆண்டுகள், சிறைத்த தண்டனையும், 60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. 60 ஆயிரம் ரூபாய் அபராதத்தில் நீதிமன்ற செலவிற்கு ரூ.10 ஆயிரமும், பாதிக்கப்ட்ட பெண்ணின் குழந்தையின் படிப்பு பராமரிப்பு செலவிற்கு 50 ஆயிரம் ரூபாயும், அதை செலுத்தத் தவறினால் மேலும், 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

ponraj sentenced to 10 years rigorous imprisonment for repeatedly rape a women: Theni court

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேனி மாவட்ட ஆட்சியர் 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் தேனி மாவட்ட மகளிர் நீதி மன்ற நீதிபதி கீதா தீர்ப்பு வழங்கினார். இதணை அடுத்து குற்றவாளி பொன்ராஜை மதுரை மத்திய சிறைக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+