ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் ரூ.1.50 கோடி பணத்தோடு, தபால் ஓட்டும் பறிமுதல்.. ஐடி அதிர்ச்சி தகவல்
Recommended Video
சென்னை: ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஒன்றிய அலுவலகத்தில், நடத்தப்பட்ட சோதனையில் பணத்தோடு சேர்த்து ஒரு தபால் ஓட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
வருமான வரி துறையினரை ஒன்றிய அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் நிர்வாகிகள் தடுத்தனர்.

வானை நோக்கி துப்பாக்கி சூடு
இதையடுத்து காவல்துறையினர் மற்றும் கட்சியினர் நடுவே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மோதலை தடுப்பதற்காக காவல்துறையினர் வானை நோக்கி நான்கு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

9 மணி நேரம் ரெய்டு
போலீசாரின் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளை, கட்சி அலுவலகத்துக்குள் செல்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அனுமதித்தனர். இதையடுத்து சுமார் ஒன்பது மணி நேரம் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

வார்டு எண்
அப்போது 94 பாக்கெட்டுகளில், வாக்காளர் பெயர், வார்டு எண்ணுடன் 1.48 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் ஒரு தபால் ஓட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தபால் ஓட்டு
அந்த தபால் ஓட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரின் பெயருக்கு நேராக டிக் செய்யப்பட்டிருந்தது. இந்த தகவலை வருமான வரித்துறை இன்று வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications