நாளை மீட்டிங்.. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ரஜினியாக ஆடுபவரின் ஆதங்கம்!

Subscribe to Oneindia Tamil

தேனி: ஓட்டலில் சாப்பிட வந்தவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தான் எங்கள் குடும்பத்திற்கு நல்ல உணவு கிடைக்கும் என்று ஆதங்கத்தை கொட்டினார்.

என்னடா இது, திடீர் என்று நம்மிடம் சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒருவர் பேசுகிறாரே என்று அவரிடம் விசாரித்த போது, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தென் மாவட்டங்களில் ரஜினியாக ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ஆடி வருபவர் என்பது தெரியவந்தது.

 Rajini fan said that our family will get rice only if Rajinikanth comes to politics

ரஜினியை போன்ற தோற்றம் கொண்ட அவர். தன் பெயரையும் ரஜினியென மாற்றிக்கொண்டிருக்கிறார் 8 மாதங்களாக ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடக்காததால் வேலை இல்லாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வந்தால் தான், என்னை பலரும் பிரச்சாரத்திற்கு கூப்பிடுவார்கள், ரஜினியை போல் பேச அழைப்பார்கள், தேர்தலில் வருமானம் பார்க்க முடியும் என்றார்.

நாளை ரஜினி, தனது மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் குறித்து விவாதிக்க உள்ளதை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் அந்த ஏழை ரஜினி ரசிகர், எப்படியும் நல்ல முடிவை அறிவிப்பார் என்று ஆழமாக நம்புகிறார். ரஜினி அரசியலுக்கு வருவது தமிழகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியாக தெரியாது. ஆனால் நிச்சயம் அந்த ரஜினி ரசிகருக்கு நல்ல பலனை தரலாம். பொறுத்திருந்து பார்ப்போம் ரஜினி நாளை என்ன முடிவை அறிவிப்பார் என்பதை.. நம்மிடம் பேசியவரின் புகைப்படத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது. அவருடைய ஆதங்கம் மட்டுமே நம் கண்முன்னே தெரிந்ததால் அப்படியே சொல்லிவிட்டோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+