சபரிமலை செல்ல சத்திரம், புல்லுமேடு பாதைகள் திறப்பு.. எளிதாக சுவாமியை தரிசிக்க எப்போது செல்லலாம்?
தேனி: சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்லும் வகையில் சத்திரம், புல்லுமேடு பாதைகள் திறக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக பலரும் செல்லும் பம்பை வழிப்பாதை மற்றும் நீண்ட சவாலான பெருவழிப்பாதை என இரண்டையும் புல்லுமேடு பாதை நேரடியாக சபரிமலை சன்னிதானத்திற்கே செல்லும் மிக எளிதான பாதையாகும்.எந்த பாதையில் எப்போது பக்தர்களை அனுமதிப்பார்கள் என்பதை பார்ப்போம்.
உலக புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்வார்கள்... இதில் கார்த்திகை மாதம் முதல் நாளில் மண்டல பூஜை தொடங்கும். இதன் காரணமாக அன்றைய நாளிலேயே ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசிக்க பாதயாத்திரையாக வரத்தொடங்குவார்கள். இதன்படி கார்த்திகை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிவிட்டார்கள். அதேபோல் ஏராளமான பக்தர்கள் முன்னதாகவே விரதம் தொடங்கியது முதலே, சபரிமலை கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

சபரிமலை செல்ல பொதுவாக நிலக்கல் வந்து. அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி பம்பை நதிக்கு வருவார்கள். அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலை உச்சியில் ஏற வேண்டும். இதுதான் பாரம்பரிய பாதையாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த பாதையில் செல்வார்கள். இதேபோல் எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பாதையில் பல மணி நேரம் நடந்து வர வேண்டும்.
இந்த இரண்டு பாதையை தாண்டி, இன்னும் இரண்டு பாதைகள் உள்ளன. இந்த இரண்டு பாதைகளுமே மிக எளிதான பாதைகளாகும். இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகில் சத்திரம், புல்லுமேடு ஆகிய 2 மலைப்பாதைகள் வழியாக சபரிமலைக்கு செல்ல முடியும். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனையொட்டி இந்த 2 பாதைகளும் அய்யப்ப பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்காக திறந்துவிடப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி நேற்று சத்திரம், புல்லுமேடு மலைப்பாதைகள் திறக்கப்பட்டது.
முன்னதாக மலைப்பாதைகள் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நுழைவு வாசல் முன்பு சத்திரம் சுப்பிரமணியசாமி கோவில் மேல்சாந்தி ஹரிலால் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஐய்யப்ப பக்தர்கள் மலைப்பாதைகள் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். முதலில் திருச்சூரை சேர்ந்த பக்தர் மலைப்பாதையில் பாதயாத்திரையாக சென்றார்.அப்படி வந்தவர்களுக்கு வனத்துறையினர் வரவேற்பு அளித்தனர். இதில் பீர்மேடு எம்.எல்.ஏ. வாலூர் சோமன், பெரியாறு புலிகள் சரணாலய வனத்துறை இணை இயக்குனர் சந்தீப், வனத்துறை அதிகாரிகள் ஜோதிஷ், பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று முதல் நாளில் 412 ஐய்யப்ப பக்தர்கள் இந்த 2 பாதைகள் வழியாக சபரிமலைக்கு சென்றனர்.
சத்திரம், புல்லுமேடு பாதைகள் வழியாக சபரிமலைக்கு ஐய்யப்ப பக்தர்கள் பாதயாத்திரை செல்ல தொடங்கியுள்ள நிலையில், இந்த பாதைகள் வழியாக பாதயாத்திரை எந்தெந்த நேரங்களில் செல்லலாம் என்பதை இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஸ்வரி அறிவித்துள்ளார். அதன்படி, சத்திரம் பாதை வழியாக காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே சபரிமலைக்கு பாதயாத்திரை செல்ல அனுமதி வழங்கப்படும். அதேபோல் புல்லுமேடு பாதை வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும்.
மேலும் சபரிமலையில் இருந்து சத்திரம் வழியாக திரும்பி வரும் பக்தர்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டுமே நடந்து வர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த பாதைகளில் வருபவர்கள் அடர்ந்த காட்டுப்பாதையில் நடந்து வர வேண்டும். அதேநேரம் பாதை மிக எளிதாக இருக்கும். நேரடியாக சபரிமலை சன்னிதானத்திற்கே வர முடியும். சுமார் 80 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்லாமல் குமுளி வண்டி பெரியாரில் இருந்தே எளிதாக வர முடியும்..
பொதுவாக குமுளியிலிருந்து சபரிமலை செல்ல 2 பாதைகள் இருக்கிறது. குட்டிகானம், முண்டகாயம், பம்பை வழியாக 129 கி.மீ. தூரம் வாகனத்தில் சென்று, 6 கி.மீ. தூரம் மலைப் பாதையில் நடந்து சென்று சன்னிதானத்தை அடைய முடியும். அதேபோல் குமுளியிலிருந்து வண்டிப்பெரியார், வல்லக்கடவு, கோழிகானம், புல்மேடு வழியாக 33 கி.மீ. சென்று, 6 கி.மீ. பள்ளத்தில் இறங்கினால் சன்னிதானத்தையே அடையலாம். இந்தப் பாதையில் செல்லும்போது தூரமும் குறைவு, பயண நேரமும் குறைவு என்பதால் அதிகமானோர் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications