ஆண்டிப்பட்டி போக தேனி பஸ் ஸ்டாண்டில் நின்ற சாந்தி! அல்லிநகரம், பழனிசெட்டிபட்டியில் அதிரவிட்ட கும்பல்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டத்தில் பெண்கள் நகை அணிந்து வெளியே செல்லவே அச்சப்படும் நிலை உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலேயே பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்படும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. ஏற்கனவே 139 பவுன் அடகு நகை மோசடி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இடையே பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு இரவு நேரத்தில் ஆண்டிப்பட்டி செல்வதற்காக சாந்தி என்ற பெண் பேருந்துக்காக காத்திருந்தார்.

Theni Bus Stand

தேனி பஸ் ஸ்டாண்டு

அப்போது தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் 2 பேர் அங்கு வந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக தப்பினர்.

திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சாந்தி கூச்சலிட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் திருடர்களை விரட்டிச் சென்றனர். அரப்படித்தேவன்பட்டி அருகே சென்றபோது, திருடர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. உடனே இருவரும் அருகில் இருந்த தோட்டத்துக்குள் புகுந்து தப்பியோடினர்.

அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கவுதம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தப்பியோடிய இருவரையும் பிடிக்க போலீசார் தேடுதல் பணியை தொடங்கினர். இதற்காக மோப்ப நாய் நிலா வரவழைக்கப்பட்டது. தோட்டப் பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட போலீசார் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சாந்தியிடம் நகை பறித்துச் சென்ற அதே நபர்கள் அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி பகுதிகளிலும் பெண்களிடம் நகை பறித்து சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 2 பகுதிகளிலும் 2 பெண்களிடம் தலா 2 பவுன் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 3 பெண்களிடம் மொத்தம் 9 பவுன் நகைகள் பறிக்கப்பட்டுள்ளன.

ஒரே இரவில் 3 இடங்களில்...

ஒரே கும்பல் அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் பெண்களை குறிவைத்து நகைகளை பறித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில், அதுவும் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் நடந்த இந்த வழிப்பறி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் நகை தொடர்பான குற்றச்சம்பவங்கள் பேசுபொருளாவது இது முதல் முறையல்ல. சமீபத்தில் ஆண்டிப்பட்டியில் அடகுக்கடை நடத்தி வந்த துரைமுருகன் என்பவர், கஸ்டமர்கள் அடகு வைத்த 139 பவுன் நகைகளை திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவானதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கியிருந்த துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.

மதுரை நகைக்கடை

அதேபோல், மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவமும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். ஆனாலும் அந்த கொள்ளை சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் தேனியில் அடகு நகை மோசடி, பெண்களிடம் அடுத்தடுத்து வழிப்பறி என நகை தொடர்பான குற்றச்சம்பவங்கள் தொடர்வது மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில் தனியாக காத்திருக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. தப்பியோடிய நபர்களை போலீசார் விரைவில் பிடிப்பார்களா? இதுபோன்ற வழிப்பறிகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பதே தற்போது தேனி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+