தேனியில் ஒரே பொய்யில் 16 லட்சம் ஏமாந்த வன ஊழியர்.. தர்மபுரி இளைஞர் சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

தேனி: பங்கு சந்தை குறித்து சரியான புரிதல் மற்றும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல், தவறான நபர்களின் ஆலோசனைகள் மற்றும் போலியான மற்றும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். அதேபோல் பங்கு சந்தையில் 100 ரூபாய் போட்டால் 150 கிடைக்கும். ஒரு லட்சம் போட்டால் அன்றே 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லாபம் கிடைக்கும் என்று போலியாக கூறுவார்கள். ஆசைக்கு சில நாள் லாபம் தருவார்கள். அவர்களை நம்பி அதிக தொகையை தந்தால், மொத்தமாக பணம் போய்விடும்.. அப்படித்தான் பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி தேனி வன ஊழியரிடம் ரூ.16.5 லட்சம் மோசடி நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி வாலிபரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த 30 வயதாகும் தனபாலன் என்பவர் வனத்துறை ஊழியர் ஆவார். இவர் பங்குச்சந்தை முதலீடு தொடர்பாக ஆன்லனில் தேடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இணையதள பக்கத்தில் அதற்கான விவரங்கள் வந்துள்ளது. அப்போது அதில் இருந்த இணைப்பை தொட்டபோது, அவருடைய எண் ஒரு வாட்ஸ்-அப் குழுவில் இணைத்திருக்கிறது.

Stock market fraud Dharmapuri youth arrested for defrauding Theni forest employee of 16 5 lakh

பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று சில வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளாரகள். மேலும் அவர்கள் தாங்கள் சொல்லும் பங்குகளை வாங்குமாறு கூறினர். அதன்படி அவர் பல தவணையாக பணம் கட்டி பங்குகளை வாங்கி, விற்று வந்தார். அதற்கான லாபத் தொகை அவருக்கான கணக்கில் காண்பித்து வந்தது. அந்த வகையில் அவர் ரூ.16 லட்சத்து 54 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால், அவர் செலுத்திய பணத்தையோ, அவருக்கான லாபத் தொகையையோ அவரால் எடுக்க முடியவில்லை. அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அவரிடம் மீண்டும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்களாம்.

இதுகுறித்து அவர் தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் பணம் அனுப்பிய 7 வங்கிக் கணக்கு விவரங்கள், அவரை தொடர்பு கொண்ட 4 செல்போன் எண்கள் மற்றும் சில இணையதள பக்கங்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில், தருமபுரி மாவட்டம் சூரியம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (29) என்பவருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த மோசடியின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக இதுபோன்ற மோசடிகள் எப்படி நடக்கும் என்றால், ஒரு போலி ஆப் அல்லது இணையதளத்தின் லிங்கை கொடுத்து கணக்கு தொடங்க வைப்பார்கள்.. அவர் பணம் அனுப்பியதும், அந்த போலி ஆப்பில் "உங்களுடைய ரூ.16 லட்சம் இப்போது ரூ.50 லட்சமாக உயர்ந்துவிட்டது" என்பது போல டிஜிட்டல் எண்களைக் காட்டுவார்கள். அதை உண்மையான லாபம் என்று நம்பிவிடுவார். லாபத்தை வங்கிய கணக்கிற்கு மாற்ற முயன்ற போதுதான் ஏமாற்று வேலை எனப்தும் பணம் பறிக்க முயற்சி என்பதும் புரியும். அப்படித்தான் தேனி வனஊழியர் ஏமாந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+