தேனி வருசநாட்டில் கூட்டம் கூட்டமாக நாய்கள்.. பீதியில் மக்கள்..‌அதிகாரி தந்த உறுதி

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் . இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என வருஷநாடு ஊராட்சி அதிகாரி உறுதி அளித்தார்.

varusanadu

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன . இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர்

பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வருசநாடு ஊராட்சி செயலர் கூறுகையில், "நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்கள் கூட்டத்தை, கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.

கேரளாவில் என்ன நடைமுறை

கேரளாவில் மனிதர்களுக்கு ஆபத்தாக விளங்கும் மற்றும் வெறிநாய்க்கடி உள்ளிட்ட குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கேரள உள்ளாட்சித் துறை இதற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பார்ப்போம்.

பிடிக்கப்படும் நாய்கள் உடனடியாக கொல்லப்படாது. அவை 2 முதல் 3 நாட்கள் வரை பிரத்யேக காப்பகங்களில் தனிமைப்படுத்தப்படும். அந்த நேரத்தில் விலங்கு நல ஆர்வலர்களோ அல்லது பொதுமக்களோ அந்த நாய்களைத் தத்தெடுத்துப் பராமரிக்க முன்வந்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். நாய்களுக்கு விஷம் வைத்தோ, தடியால் அடித்தோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது. தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவர் முன்னிலையில், வலி இல்லாத மருத்துவ ஊசிகள் மூலமாக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் அரசு அதிகாரி, கால்நடை மருத்துவர் மற்றும் விலங்கு நல ஆர்வலர் அடங்கிய மேலாண்மைக் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுக்குப் பிறகே கருணைக் கொலை அனுமதிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முறையாகப் பதிவேட்டில் குறிக்கப்பட்டு, மாநில அளவிலான உயர்மட்டக் குழுவால் தணிக்கை செய்யப்படுகிறது‌

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், விலங்கு நல விதிகளையும் மதிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கேரள அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+