முழு கொள்ளவை எட்டிய வைகை அணை.. ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு! 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி: தொடர் மழையால் தேனி ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை நிரம்பியுள்ளது. உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் மிகப் பெரியளவில் மழை பெய்தது. கடந்த மாதம் தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாகக் கனமழை கொட்டியது.

தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் உள்ள நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரம்பியது. இது விவசாயிகள் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வைகை அணை நிரம்பியது: இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே தேனி, திண்டுக்கல் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்படி தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. அணைக்கு இப்போது நீர் வரத்து வினாடிக்கு 3100 கன அடியாக உள்ள நிலையில், அது அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
வைகை அணையில் உள்ள பெரிய பிரதான 7 மதகுகள் மூலம் 3100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அலர்ட்: வைகை கரை பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சைரன் மூலம் ஒலி எழுப்பியும் எச்சரிக்கை விடுத்தும் கரையேறும் இருக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருகிறது.
வைகை அணை கடந்தாண்டைப் பொறுத்தவரை அது ஜன. 11ஆம் தேதி தான் நிரம்பி இருந்தது. ஆனால், இந்தாண்டு 5 நாட்கள் முன்னதாகவே ஜன. 6ஆம் தேதியே நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications