அண்ணனை முந்திய தம்பி... ஆண்டிபட்டியில் அதிமுக முன்னிலை.. அமமுக பரிதாபம்
நாடு முழுவதும்மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் பாதமாக வந்துள்ளது.
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் முன்னிலை வகிக்கிறார்.
நாடு முழுவதும்மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் பாதமாக வந்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் நடந்து முடிந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக 13 சட்டசபை தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில், 5வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் 1257 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் லோகிராஜன் 19 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும்,
திமுக வேட்பாளர் மகாராஜன் 18ஆயிரத்து 236 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் 4 ஆயிரத்து 856 வாக்குகள் பெற்று 3 வது இடத்தில் உள்ளார். இதில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன், திமுக வேட்பாளர் மகாராஜனின் தம்பி ஆவார். இதன் மூலம் அண்ணனை வீழ்த்த தம்பி லோகிராஜன் முன்னிலை வகிக்கிறார்.


Click it and Unblock the Notifications
