4 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தட்டிவிட்ட அமமுக
தேனி: இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை அமமுக தட்டிவிட்டதால் திமுக அங்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களை வென்றுள்ளது. அதிமுக 9 இடங்களை கைப்பற்றி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, வலுவான கூட்டணி அமைத்தற்கு பலனாக சில சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதன்படி சோளிங்கர், பாப்பிரெட்டிபட்டி மற்றும் அரூர் உள்பட 3 தொகுதிகளில் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. இங்கு அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
அதேநேரம் மீதமுள்ள தொகுதிகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதிமுகவின் கோட்டையான தூத்துக்குடி, மதுரை மற்றும் தேனிப் பகுதிகளில் அமமுகவால் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இதன்படி ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், ஆண்டிபட்டி பெரியகுளம் உள்ளிட்ட 3 தொகுதிகளில் அதிமுக- திமுக இடையே இருந்த வாக்கு சதவீதத்தைவிட அமமுகவின் வாக்குகள் அதிகமாகும்.

அதிமுகவின் வாக்குகளை அமமுக கணிசாமாக அனைத்து தொகுதிகளிலும் பிரித்த போதிலும் இந்த 4 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவ அமமுக முக்கிய காரணமாகும்.
அதிலும் குறிப்பாக ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதியில் 1996ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் திமுக தன் வசப்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications