போஸ்டரில் சிரித்த ’தளபதி’ எம்ஜிஆர்..உற்று பார்த்தால் ஷாக்! கிராஃபிக்ஸில் கலக்கும் தேனி தவெக நண்பாஸ்

Subscribe to Oneindia Tamil

தேனி: 2026 தமிழகத்தை காக்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே என வசனங்களுடன் பொதுமக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எம்ஜிஆர் கெட்டப்பில் எம்ஜிஆருக்கு அருகிலேயே போஸ் கொடுக்கிறார் தலைவர் விஜய். தேனி தவெகவினர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

விக்கிரவாண்டியில் மாநாடு ஆரம்பித்தது முதல் தற்போது வரை விஜய் தான் தமிழக அரசியலில் பேசு பொருளாக இருக்கிறார். ஆதரவாகவோ எதிராகவோ கண்டிப்பாக விஜய் பற்றியே ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் பிற கட்சிகளும் பேசி வருகின்றன.

theni vijay tvk

விஜய் மாநாட்டில் மாஸ் காட்டிய நிலையில் நிச்சயம் வரும் தேர்தலில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். தனித்துப் போட்டியா? கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் தற்போதைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் என விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்:

இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கட்சியில் பதவி அளிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது.

தவெக நிர்வாகிகள் நியமனம்:

மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு தர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருக்கிறது. மகளிர் அணி, தொண்டரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 28 அணிகளுக்கும் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது.

கலக்கும் நிர்வாகிகள்:

இதனையடுத்து தலைமையின் கவனத்தை பெறுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தினர், பேட்டிகள், நலத்திட்ட உதவிகள், போராட்டங்கள் என கலக்கி வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டம் பெரியகுளம் நகர தமிழக வெற்றி கழகம் சார்பாக பெரியகுளம் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

விஜய் போஸ்டர்:

இதில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தை காக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே என வசனங்களுடன் பொதுமக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் பெரியகுளம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. இதில் தமிழக வெற்றிக்கழக பெரியகுளம் நகரத் தலைவர் தினேஷ், நகரச் செயலாளர் முகமது வாஜித், நகரத் துணைச் செயலாளர் முனீஸ் மற்றும் மற்றும் நிர்வாகிகள் அனைத்து பொதுமக்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

theni vijay tvk

எம்ஜிஆர்:

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர் கெட்டப்பில் அட்டகாசமாக அந்த போஸ்டரில் காட்சி கொடுக்கிறார் விஜய். அரசியலில் இருந்து ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர் போல் விஜய்யும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே இது போன்ற போஸ்டரை வடிவமைத்துள்ளதாக கூறுகின்றனர் அந்த நிர்வாகிகள். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+