தங்க தமிழ்ச் செல்வனுக்கு திமுகவில் தேனி மாவட்ட பொறுப்பு வழங்கிய ஸ்டாலின்.. அதுவும் இந்த நேரத்தில்!
தேனி: தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச் செல்வனுக்கு மாவட்ட பொறுப்பு வழங்கி உள்ளார் ஸ்டாலின்.
அதிமுகவின் கோட்டையாக விளங்கும் தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஒபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திர நாத்தின் ஆதிக்கமே உள்ளது. அவர்களுக்கு ஈடு கொடுக்க தங்க தமிழ் செல்வன் சரியான ஆளாக இருப்பார் என்று நினைத்த ஸ்டாலின் மாவட்ட பொறுப்பை வழங்கி உள்ளார்.

திமுக வெற்றி
தேனி மாவட்டத்தில் கடந்த முறை நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக, பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டியில் தோற்றது. அதேநேரம் தேனி மக்களை தொகுதியில் வெற்றி பெற்றது. மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுகவிடம் அதிமுக தோல்வி அடைந்தது.

வலியைமாக நிறுத்த முடிவு
இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதியில் ஒன்றான போடியில் ஓ பன்னீர்செல்வம் வழக்கம் போல் போட்டியிடுவார் என்பதால் அவருக்கு எதிராக வலிமையான பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்காக இப்போதே தங்கதமிழ்செல்வனை களம் இறக்கி உள்ளது திமுக தலைமை. அத்துடன் இந்த முறையாவது நான்கு தொகுதியிலும் வெல்ல வேண்டும் என்று முனைப்பு காட்டியுள்ளது.

தங்கதமிழ்செல்வனுக்கு பொறுப்பு
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் தேனி மாவட்ட பொறுப்பில் தங்க தமிழ்ச் செல்வனை நியமித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு
கடந்த மாதம் மத்தியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அதன்பின்னர் அண்மையில் திமுக நடத்திய வேளாண் மசோதவிற்கு எதிராக போராட்டத்தை முன்னின்று நடத்தினார். அத்துடன் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில் அதிமுக குறித்து பேசிய அவர், தற்போது நடைபெறும் ஆட்சி முடியும் போது அதிமுக பல அணிகளாக உடையும் என்றார். அத்துடன் சசிகலா விடுதலை பெற்று வெளியே வந்தாலும் எந்த மாற்றமும் நடக்காது என்றார்.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications