உன்மேலே தங்க தமிழ்செல்வனுக்கும் ஆசைதான்.. கதிர்காமு சொன்னதாக எப்ஐஆரில் தகவல்.. பரபரக்கும் பெரியகுளம்
கதிர்காமு மீதான பாலியல் புகாரில் தங்க தங்கதமிழ்செல்வன் பெயர் அடிபட்டு வருகிறது.
Recommended Video

பெரியகுளம்: "தங்க தமிழ்ச்செல்வன் உன் மேல ரொம்ப ஆசைப்படுகிறார். அவரோடு நீ உறவு வெச்சிக்கோ.. என் அரசியல் செல்வாக்கு பத்தி உனக்கே தெரியும் என்று கதிர்காமு சொன்னார்" என்று கதிர்காமுவால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் இளம் பெண் கூறியதாக பெரியகுளம் போலீஸ் தாக்கல் செய்துள்ள எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
3 நாட்களாக அமமுகவில் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. இளம் பெண் ஒருவர் பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பாலியல் புகார் தந்துள்ளார்.
கடந்த 14.10.2015-அன்றுதான் இளம்பெண்ணை கதிர்காமு பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. அல்லிநகரத்தில் ஆஸ்பத்திரி நடத்தி வரும் டாக்டர் கதிர்காமு தன்னை மிரட்டியதாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அந்த பெண் தேனி மகளிர் போலீசில் புகார் தந்துள்ளார்.

ஆபாச வீடியோ
இந்த புகாரின்பேரில் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்ததுதான் தாமதம்... அதற்கு ஆதாரமாக கதிர்காமுவின் ஆபாச வீடியோ ஒன்று வெளிவந்துவிட்டது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நைட்டி அணிந்த பெண்
அது சம்பந்தப்பட்ட புகைப்படமும் வெளிவந்தவண்ணம் இருக்கிறது. அதில் பெட்ரூமில் கதிர்காமு போன்ற தோற்றத்தில் இருப்பவர் பனியனுடன் கட்டில் அருகில் நிற்கிறார். நைட்டி அணிந்த பெண் அந்த கட்டிலில் இருப்பது போலவும், அவருடன் இந்த நபர் ஜாலியாக உள்ளது போலவும் போட்டோக்கள் உள்ளன.

அரசியல் சதி
இதை பற்றி கதிர்காமு சொல்லும்போது, "ஓபிஎஸ்-ஈபிஎஸ் தூண்டுதல், அரசியல் சதி, பழிவாங்கும் நடவடிக்கை" என்கிறார். அதேபோல, தாமதமாக வந்து புகார் அளிப்பது பற்றி பெண் சொல்லும்போது "நான் ரொம்பவும் பயந்து போய் இருந்தேன். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெளியானதுக்கு அப்பறம் விழிப்புணர்வு ஏற்பட்டதால் எனக்கு தைரியம் வந்துடுச்சு. அதான் தைரியமாக புகார் தர வந்தேன்" என்று விளக்கம் தருகிறார்.

நியாயம் கேட்டேன்
அந்த பெண் அளித்த எப்ஐஆரில் ஒரு முக்கிய தகவல் உள்ளது. அது தங்கதமிழ்செல்வன் பற்றியதுதான். அந்த பெண் இவ்வாறு அதில் சொல்கிறார்: "சம்பவம் நடந்த சில மாதங்களில் கதிர்காமு பெரியகுளம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாகி விட்டார். அதனால் அவரை எளிதாக அணுக முடியவில்லை. 2017, மே மாதம் திரும்பவும் கதிர்காமுவை சந்தித்து நியாயம் கேட்டேன், வீடியோ பதிவையும், புகைப்படங்களையும் கேட்டேன். ஆபீசுக்கு வா என்று கதிர்காமு சொன்னார்.

உறவு வெச்சுக்கோ
அங்கு நான் சென்றபோது, "உன் மேல் தங்கதமிழ்ச்செல்வன் ரொம்பவும் ஆசைப்படுகிறார். அவரோடு நீ உறவு வைத்துக்கொள். எனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு பத்தி உனக்கே தெரியும். இனிமேல் என்னை தொந்தரவு செய்தால் குடும்பத்துடன் கொளுத்தாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார்" என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆக, எப்ஐஆரில் தங்கதமிழ்செல்வன் பெயரும் அடிபடுவதால் தேனி வட்டாரமே கிடுகிடுத்து போய் உள்ளது. இன்னும் என்னென்ன பாம்பெல்லாம் வரப் போகுதோ!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications