Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை: ஸ்டாலின் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்யவார்..! திமுகவில் சேர்ந்ததும் ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த தங்க தமிழ்செல்வன்...

    சென்னை: அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

    அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, அவரது பிஏவிடம் கடுமையாக திட்டும் ஆடியோ ஒன்று அண்மையில் வெளியாகியது. அதன்பிறகு தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் டிடிவி தினகரன் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அமமுகவை விட்டு விலகும் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்பட்டது.

    Thanga tamilselvan may join to dmk today In the presence of mk stalin

    இதனால் தேனியில் இருந்து சென்னை வந்த தங்க தமிழ்ச்செல்வன் தனக்கு நெருக்கமான அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகளிடம் பேசி வந்தார். இந்த சூழலில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைய உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

    இதனை உறுதிபடுத்தும் வகையில் திமுக கரை வேட்டிகளுடன் தேனியில் இருந்து சென்னைக்கு தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் நேற்று புறப்பட்டார்கள்.

    Thanga tamilselvan may join to dmk today In the presence of mk stalin

    இந்நிலையில் இன்று காலை தங்க தமிழ்செல்வன சந்தித்த ஆதரவாளர்கள் அவருடன் இணைந்து அண்ணா அறிவாலயம் புறப்பட்டார். பிற்பகல் 12 மணி அளவில், ஸ்டாலினை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இந்த இணைப்பின்போது துரைமுருகன், செந்தில் பாலாஜி உள்பட பலர் இருந்தனர்.

    Thanga tamilselvan may join to dmk today In the presence of mk stalin

    பல ஆண்டுகளாக அதிமுக கரை வேட்டியுடன் சுற்றிய தங்க தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள் இன்று அப்படியே திமுகவுக்கு மாறுவது தேனி மாவட்டத்தில் திமுகவுக்கு புது தெம்பை அளிக்கும் என திமுக தலைமை நம்புவதாக கூறப்படுகிறது. தேனி மாவட்டம் பொதுவாகவே அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. அதிமுகவிற்கு மோசமான சூழலிலும் கைகொடுத்த மாவட்டம் என்றால் தேனி தான். இங்கு தான் ஒ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்பியாகி உள்ளார்.

    இதனால் தங்க தமிழ்செல்வனின் வருகை திமுகவுக்கு பலமாக இருக்கும் என கட்சி தலைமை நம்புகிறதாம். இதனால் செந்தில் பாலாஜி பாணியில் திமுகவில் தங்கம் இணைய சம்மதித்து உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+