அட அது இல்லப்பா.. இதுக்கு போடுங்க.. அட ஆமாப்பா.. ஆமா.. தர்மசங்கடத்தில் தங்க தமிழ்ச்செல்வன்
தேனி அமமுகவில் தங்க தமிழ்செல்வனுக்கு சின்னம் தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளது.
Recommended Video

தேனி: சிக்கன் பிரியாணி முக்கியமா இல்லை சின்னம் முக்கியமா.. தங்க தமிழ்ச்செல்வனிடம் போய் இதைக் கேட்டால் சின்னம்தாய்யா முக்கியம் என்று அடித்துச் சொல்வார்.. அந்த அளவுக்கு மனுஷன் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார்.
அட, பின்ன என்னங்க.. இத்தனை காலமாக இரட்டை இலை என்று ஜாலியாக இருந்து விட்டு இப்போது பரிசுப் பெட்டியுடன் தொகுதிக்குள் பிரச்சாரத்திற்குப் போனால், என்னப்பு, தேர்தலா, போட்ருவோம்ப்பு,, இலைதானே போட்ருவோம் என்று ஊரில் உள்ள பெருசுகள் ஹாயாக கூறிச் செல்கிறார்களாம்.. மனுஷன் டென்ஷன் ஆவாரா மாட்டாரா.
அமமுக சார்பாக தேனி மக்களவை தொகுதியில் தங்க தமிழ்செல்வன் களம் இறக்கப்பட்டுள்ளார். எப்படியும் ஓபிஎஸ் மகனை தோற்கடித்தே தீருவேன் என்று தொகுதிக்குள் றெக்கை கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவருக்கு இப்போது சின்னம்தான் பெரிய சிக்கலாக மாறியுள்ளது.

குக்கர் சின்னம்
சாதீய ஓட்டுக்களை பாதி நம்பினாலும், மீதி ஓட்டுக்களுக்கு சில தாராளங்களையும் தொகுதியில் காட்டி வருகிறார் தங்க தமிழ்செல்வன். இந்த நிலையில் அதிகம் எதிர்பார்த்து, போராடி கேட்கப்பட்ட குக்கர் சின்னம் கிடைக்காமல் போய்விட்டது. பரிசுப் பெட்டிதான் கிடைத்துள்ளது.

பரிசு பெட்டி
இங்குதான் சிக்கலே ஆரம்பித்துள்ளது. ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு இரட்டை இலையில் வளைத்து வளைத்துக் குத்திய மக்கள் இப்போது அவரை பரிசுப் பெட்டியுடன் பார்க்கும்போது பழைய சின்னம்தான் வந்து போகிறதாம். அதனால், "மறக்காம உங்களுக்கு இந்த முறையும் இரட்டை இலையில் ஓட்டு போட்டுடறோம்.. கவலையை விடுங்க" என்று கூறி விட்டு தமிழ்ச்செல்வன் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டுப் போகிறார்களாம்.

மாத்தி போட்ராதீங்கப்பா
இதைக் கேட்டதும் அதிர்ந்து போகும் தங்க தமிழ்செல்வனோ, "எய்யா.. ஏ ஆத்தா.. நான் இப்போதைக்கு சுயேச்சையிலதான் நிக்கறேன். மறக்காம என் சின்னத்துல ஓட்டு போடுங்க. அதுக்குப் போடாதீங்க" என்று சிரித்து சமாளித்து அவர்களிடம் மாத்திப் போட்ராதீங்கப்பா என்று புரிய வைக்க முயற்சிக்கிறாராம்.

நல்ல உதாரணம்
ஜனங்களுக்கு சின்னம்தான் முக்கியம். அப்படித்தான் நம்ம அரசியல்வாதிகள் ஜனங்களை வளர்த்து வைத்துள்ளனர். வேற எதையும் சிந்திக்க விடாமல், ஆள் பார்த்து வாக்களிக்க விடாமல் சின்னத்தை மட்டும் புத்தியில் புகுத்தி இதை மட்டும் பாருங்க போதும் என்று சொல்லி வைத்தால் கடைசியில் இப்படித்தான் நேரும் என்பதற்கு தங்க தமிழ்ச்செல்வன் படும் பாடுதான் நல்ல உதாரணம்.
ஆக, ரவீந்திரநாத் குமார் ஹேப்பி அண்ணாச்சி!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications