Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் வீட்டு துக்க நிகழ்வில் சூடான அரசியல் பேச்சு.. தனியரசு, மருதுவோடு இணைந்த வேல.ராமமூர்த்தி!

ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் இறுதிச்சடங்கு நிகழ்வின்போது ஆங்காங்கே சூடாக அரசியல் விவாதமும் நடந்தது.

Subscribe to Oneindia Tamil

தேனி : அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் நேற்று முன்தினம், அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் காலமான நிலையில், அங்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் வந்த நிலையில், அரசியல் விவாதங்கள் சூடாக நடந்துள்ளன.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) நேற்று இரவு காலமானார். கடந்த 22ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தேனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரைச் சென்று சந்தித்து, மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் ஓபிஎஸ்.

பின்னர் ஓபிஎஸ் சென்னை சென்ற நிலையில் பழனியம்மாள் உடல்நிலை மோசமடைந்து அவர் நேற்று இரவு மரணமடைந்தார்.

ஓபிஎஸ் தாயார் மறைவு

ஓபிஎஸ் தாயார் மறைவு

தனது தாய் இறந்த தகவல் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து கார் மூலம் பெரியகுளம் வந்தார். பெரியகுளம் அக்ரஹாரம் தெருவில் உள்ள தனது வீட்டில் தனது தாயாரின் உடலைப் பார்த்து கதறி அழுதார். இதைத் தொடர்ந்து தாயின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இறந்த பழனியம்மாளுக்கு ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இதில், ஓ.பன்னீர்செல்வம் மூத்த மகன் ஆவார்.

இறுதிச் சடங்கு

இறுதிச் சடங்கு


ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், சசிகலா, டிடிவி தினகரன், சீமான் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். ஓபிஎஸ்ஸின் தாயார் பழனியம்மாளின் இறுதி ஊர்வலம் சற்று முன்னர் நடைபெற்றது. அவரது உடல் பெரியகுளம் நகராட்சி பொதுமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 அமைச்சர் அஞ்சலி

அமைச்சர் அஞ்சலி

ஓபிஎஸ் தாயார் உடலுக்கு உறவினர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அதிமுகவினர் மற்றும் பல்வேறு கட்சியினர் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நடிகரும் எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தி, ஓபிஎஸ் தாயார் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றார்.

தனியரசு - மருது அழகுராஜ்

தனியரசு - மருது அழகுராஜ்

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் எம்.எல்.ஏ தனியரசு, அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், ஓபிஎஸ் அணியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் அசோகன் ஆகியோர் ஓபிஎஸ் தாயார் இறுதி ஊர்வல நிகழ்வுக்கு முன்னதாக ஒரு இடத்தில் நின்றபடி அதிமுக விவகாரம் குறித்தும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றியும் சூடாக அரசியல் பேசிக்கொண்டிருந்தனர்.

வேல.ராமமூர்த்தி

வேல.ராமமூர்த்தி

அப்போது, அங்கு வந்த நடிகரும் எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தியும் அவர்களுடன் இணைந்துகொண்டார். பின்னர் அவர்கள் அனைவரும் இணைந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அரசியல் களம் சூடாக இருக்கும் நிலையில், துக்க வீட்டிலும் அரசியல் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ் தரப்பினர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்து வந்த நிலையில் தான் ஓபிஎஸ் தாயாரின் மரணம் ஓபிஎஸ்ஸை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+