தேனி அம்சவள்ளிக்கு இப்படியொரு சிக்கலா?.. "அது" பக்கத்திலேயே 3 நாள் உட்கார்ந்திருந்த புரோட்டா மாஸ்டர்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி அம்சவள்ளிக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் குடும்பத்தினர் பதறிப்போய்விட்டனர்.. காலேஜுக்கு போன பிள்ளைகள் வீடு திரும்பிய பிறகு, அம்சவள்ளி மட்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், போலீசாருக்கு கிடைத்த ஒரு தகவல் குடும்பத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது... அப்படி என்ன தான் தேனியில்?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அழகர்சாமிபுரம் சிஎஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தங்கி வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்சவள்ளி.. 38 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Theni Amsavalli Murder

தேனி அம்சவள்ளி

கடந்த 9ம் தேதி மகனும், மகளும் கல்லூரிக்கு சென்ற பிறகு அம்சவள்ளி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவேயில்லை.. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அம்சவள்ளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு அவரது மகள் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து அம்சவள்ளியை தேடி வந்தனர்.

அம்சவள்ளியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக தேனியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

சாக்குமூட்டையில் என்ன

இதனிடையே, தேனி அருகே பழனிசெட்டிபட்டி சவுடேஸ்வரி நகரில் வசித்து வரும் பரோட்டா மாஸ்டர் அப்துல் ரகுமான் (36) வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பழனிசெட்டிபட்டி போலீசாரும், அம்சவள்ளியின் செல்போன் தொடர்பு குறித்து விசாரித்து வந்த பெரியகுளம் போலீசாரும், அப்துல் ரகுமான் வீட்டுக்கு இரவு சென்றனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

பணப்பிரச்சனை

அங்கு அப்துல் ரகுமான் இருந்துள்ளார்... அவருக்கு பக்கத்திலேயே ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அந்த மூட்டையை திறந்து பார்த்தபோது, அம்சவள்ளி தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அப்துல் ரகுமானை கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், அம்சவள்ளிக்கும் அப்துல் ரகுமானுக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 9ம் தேதி அம்சவள்ளி அப்துல் ரகுமான் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. அப்போது பணம் தொடர்பாக 2 பேருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அம்சவள்ளி ரூ.5000 கேட்டதாகவும், அப்துல் ரகுமான் ரூ.2,000 மட்டுமே கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அது பக்கத்திலேயே பரோட்டா மாஸ்டர்

இதில் ஆத்திரமடைந்த அப்துல் ரகுமான் அம்சவள்ளியை முதலில் தாக்கியதில், அவர் சுவரில் மோதி மயங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் பலமாக தாக்கியிருக்கிறார்.. இதில்தான் அம்சவள்ளி துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து கொலையை யாருக்கும் தெரியாமல் மறைக்க முடிவு செய்த அப்துல் ரகுமான், அம்சவள்ளியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டியுள்ளார். பிறுகு உடலை வெளியே கொண்டு சென்று எங்காவது வீசி விடலாம் என நினைத்துள்ளார். ஆனால் தெருவில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததாலும், உடலை எங்கு கொண்டு சென்று போடுவது என்று தெரியாததாலும், வீட்டிலேயே சடலத்தை வைத்துவிட்டார்..

தேனியில் அதிர்ச்சி

இதனால் அம்சவள்ளியின் உடல் சுமார் 3 நாட்களாகவே அந்த வீட்டுக்குள் இருந்துள்ளது. அந்த சடலம் பக்கத்திலேயே அப்துல் ரகுமான் வெறித்தபடி உட்கார்ந்திருந்தாராம்.. சடலத்திலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதையடுத்தே அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டதுடன், அப்துல் ரகுமானையும் கைது செய்துள்ளனர்.

சம்பவ இடத்தை தேனி மாவட்ட எஸ்பி பிரவின் கவுதம் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலைக்கான காரணம், 2 பேருக்குமிடையே பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்... இருந்தாலும் வெறும் 3 ஆயிரம் ரூபாய்கக்க நடந்த இந்த கொடூர கொலை பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+