வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது.. திமுக மிக கடுமையான சவாலை சந்திக்க போகும் தேனி மற்றும் கோவை?

Subscribe to Oneindia Tamil

தேனி: கோவை மற்றும் தேனி தொகுதியில் திமுகவிற்கு வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.. தமிழ்நாட்டில் மற்ற எல்லா தொகுதியையும் விட திமுக கடும் சவாலை சந்திக்க போவது தேனி மற்றும் கோவையில் தான் என்கிறார்கள்.. ஏன் அப்படி சொல்கிறார்கள்.. அந்த தொகுதிகளின் நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட உள்ளன. இந்த தேர்தலில் திமுக மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 2 தொகுதிகளின் மீது மிக அதிக கவனம் ஏற்பட்டுள்ளது. அந்த இரண்டு தொகுதிகள் எது என்றால், தேனி மற்றும் கோவை தான்..

Theni and Coimbatore lok sabha constituencies where the DMK will face a tough challenges

தேனி மற்றும் கோவை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவின் கோட்டை.. இங்கு திமுகவே இந்த முறை களம் இறங்கி உள்ளது. திமுகவிற்கு இந்த முறை தேனி மற்றும் கோவை தொகுதிகள் கடும் சவாலாக இருக்கும் என்கிறார்கள். ஏனெனில் தேனி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அதேபோல் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த இரண்டுமே விஐபி தொகுதிகள் என்பதால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தராமல் அவர்களை தானே எதிர்கொள்ள முடிவு செய்து வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது,.

Theni and Coimbatore lok sabha constituencies where the DMK will face a tough challenges

தமிழ்நாட்டில் மற்ற எல்லா தொகுதிகளையும் விட தேனி, மற்றும் கோவையில் திமுக கடும் சவாலை சந்திக்கும் என்கிறார்கள் அங்கிருப்பவர்கள்... டிடிவி தினகரன் மட்டும் கோவில்பட்டியில் போய் போட்டியிடாமல், சட்டசபை தேர்தலில் தேனி மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தால் களமே மாறியிருக்கும் என்கிறார்கள் அமமுகவினர். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மகனுக்கு எதிராக 2019ல் தங்கதமிழ்செல்வனுக்கு பதில் அவர் களம் இறங்கி இருந்தாலும் நிலையே வேறாக இருந்திருக்கும் என்கிறார்கள்..காரணம் டிடிவி தினகரனுக்கு வலுவான செல்வாக்கு தேனி பகுதியில் இருப்பது தான் காரணம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் தேனி தொகுதியில் 2004க்கு பிறகு அவர் போட்டியிடவில்லை.. அதேநேரம் அமமுக ஆரம்பித்த பின்னர் தேனியில் அதிமுகவிற்கே களம் கடுமையாக இருந்தது.. தேனி மாவட்டத்தில் போடியை தவிர மற்ற தொகுதிகளில் 2021 தேர்தலில் திமுக வெற்றி பெறவும், அதிமுக தோற்கவும் அமமுகதான் காரணம் என்கிறார்கள்.. டிடிவி தினகரனுக்கு வலுவான ஆதரவு உள்ள பகுதியாக தேனி உள்ளதால் தங்கத்தமிழ்செல்வன் வெற்றி பெறுவது என்பது பெரிய சவாலாக இருக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

தேனியில் டிடிவி.தினகரன் போட்டியிட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று இன்றைய தேனி எம்பி ரவீந்திரநாத்தே அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். இதனிடையே டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவின் வாக்குகள் மாறினால் கண்டிப்பாக அது திமுகவிற்கு சிக்கலாகும் என்கிறார்கள்...

தேனியில் இப்படி என்றால், கோவையை பொறுத்தவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.. தேனியைப் போல் கோவையும் அதிமுகவின் கோட்டையாகும். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை.. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தான் திமுக அங்கு வெற்றி பெறாத அளவிற்கு வியூகம் அமைத்தார் என்று இன்றும் சொல்கிறார்கள்.. அங்கு அதிமுகவிற்கு செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளதோ, அதில் ஓரளவுக்கு பாஜகவிற்கும் உள்ளது.. குறிப்பாக கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக கோவையில் பாஜகவிற்கு ஆதரவு அதிகம்..

பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை திமுக நிறுத்தவில்லை என்று சிலர் சமூக ஊடகங்களில் விமர்சிக்கிறார்கள்.. கோவையில் அதிமுக- பாஜக-திமுக என மும்முனைப் போட்டி இருப்பதால் வாக்குகள் பிரியும் வாய்ப்பு உள்ளதால், அது யாருக்கு சாதகமாகும் என்ற கேள்வி எழுகிறது.. கோவையில் திமுகவை கடந்த உள்ளாட்சி தேர்தலில் செந்தில் பாலாஜி தற்போது சிறையில் இருப்பது மைனசாக பார்க்கப்படுகிறது. எனவே கோவையில் அதிமுகவின் ஆதிக்கம், பாஜக சார்பில் களம் இறங்கும் அண்ணாமலை என இரு பெரிய சவால்களை திமுக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+