தேனி பஸ் ஸ்டாண்டுக்குள் கலெக்டர்.. டக்னு ஓட்டலுக்குள் நுழைந்து.. ரூ.18,000 தேவையா? மக்கள் மகிழ்ச்சி
தேனி: தேனி மாவட்ட கலெக்டர் மேற்கொண்ட ஒரே அதிரடியால், நடைபாதை உணவு வியாபாரிகளிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியிருந்தும்கூட, விதிமுறைகளை மீறி உணவுப்பொருட்கள் தேனியில் விற்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.
சமீபகாலமாகவே, ஓட்டல்களிலும், இறைச்சி கடைகளிலும் தரமற்ற இறைச்சியை விநியோகிக்கப்பதாக புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.. இதையடுத்து அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஓட்டல்களில், நடைபாதை உணவகங்களில், இறைச்சி கூடங்களில், மீன் மார்க்கெட்டுகளில் என எங்கெங்கு புகார்கள் வருகிறதோ, அங்கெல்லாம் விரைந்து சென்று, சோதனை மேற்கொள்கிறார்கள். இதில், புகார்கள் உண்மையாகும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. எனினும், சரியான, சுகாதாரமான முறையில் உணவு விநியோகிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்தபடியே உள்ளது.
சோதனைகள்: அதனால்தான, சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்திலுள்ள உணவு நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும், உணவு பரிசோதனை ஆய்வகங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் (FSSIA) தலைமை செயல் அதிகாரி ஜி.கமலா வர்தன ராவ், அறிவுறுத்தியிருந்தார்..
அதுமட்டுமல்லாமல் FSSIA மூலம் நிராகரிக்கப்பட்ட உணவு பொருட்களின் இறக்குமதியை தடுப்பது தொடர்பான செயல்முறைகள் குறித்தும், உணவக மையங்களை மேம்படுத்தும் பணிகள் குறித்தும் அவர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தனர்.
ஆனால், 2 தினங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், மேலக்கரந்தை பகுதிகளில் உணவகங்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 60 கிலோ உணவுபொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் செய்திக்குறிப்பு வெளியிட்டு கூறியிருந்தார்.
தேனி பஸ் ஸ்டாண்டு: இந்நிலையில், நேற்றைய தினம், தேனி பஸ் நிலையத்தில் தொடர்ந்து காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டருக்கு பல முறை தகவல்கள் வந்தன.. இதன் அடிப்படையில் நேற்று திடீரென, மாவட்ட கலெக்டர் திடீரென தேனி பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார்.. அங்கிருந்த அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது அங்குள்ள பேக்கரி கடை, டீ கடை, இறைச்சி கடை மற்றும் உணவு கடை ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்... அந்த கடையில் கெட்டுப்போன பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. பின்னர் அவைகளை எல்லாம் பறிமுதல் செய்து, அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது..
பறிமுதல்: அத்துடன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மொத்தம் 200 கிலோவுக்கும் மேலான காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, 2.5 கிலோ கெட்டுப்போன இறைச்சியும் கண்டுபிடிக்கப்பட்டு அவையும் பறிமுதல் செய்யப்பட்டன.. இறுதியில், மொத்தம் 6 கடைகளுக்கு ரூ. 18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கலெக்டரின் இந்த திடீர் அதிரடியால், தேனியில் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் பொதுமக்களுக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications