அதிமுகவில் ஆயிரம் நடக்கட்டும்.. அசராத டிடிவி தினகரன்.. தேனி மாவட்ட அமமுக இரண்டாக பிரிப்பு

Subscribe to Oneindia Tamil

தேனி: நிர்வாக வசதிக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி மாவட்டம் 2ஆக பிரிக்கப்பட்டுள்ளதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஒரு பக்கம் அதிமுக குழப்பங்களுக்கு இடையே, தனது கட்சிப் பணியில் டிடிவி தினகரன் துரிதம் காட்டி வருகிறார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டத்தில் கழகப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு வசதியாக, கழக அமைப்பு ரீதியாக "தேனி வடக்கு" மாவட்டம், "தேனி தெற்கு" மாவட்டம் எனப் பிரிக்கப்பட்டு, இரு கழக மாவட்டங்களும் கீழ்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.

தெற்கு மாவட்டம்

தெற்கு மாவட்டம்

தேனி வடக்கு மாவட்டம் 1. ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி, 2. பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி என்று பிரிக்கப்படுகிறது. இதேபோல தெற்கு மாவட்டத்திற்கான சட்டசபை தொகுதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.

தெற்கு மாவட்டம்

தெற்கு மாவட்டம்

தேனி தெற்கு மாவட்டம், 1. கம்பம் சட்டமன்றத் தொகுதி, 2. போடி சட்டமன்றத் தொகுதி எனப் பிரிக்கப்படுகிறது. தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் R.ஜெயக்குமார் (ஆண்டிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர்), தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில், M.முத்துசாமி (அய்யார் தெரு, பூவானந்தபுரம், சிலையம் பேட்டை அஞ்சல், தேனி மாவட்டம்.) நியமிக்கப்படுகிறார்கள்.

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணிகளை ஆற்றிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும்வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வேகம் காட்டும் டிடிவி தினகரன்

வேகம் காட்டும் டிடிவி தினகரன்

ஒரு பக்கம் அதிமுகவில் யார் முதல்வர் என்ற போட்டி நிலவுகிறது. ஆனால் அதைப் பற்றி டிடிவி தினகரன் கவலைப்படவில்லை. தனது கட்சி வியூகங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சசிகலா சிறையிலிருந்து எப்போது வெளியே வருவார் என ஆரூடங்கள் சொல்லப்படும் நிலையல், அமமுக கட்சிப் பணிகளில் டிடிவி தினகரன் வேகம் காட்டுவது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+