ஸ்ஸப்பா முடியல.. இனி இண்டர்வியூ இல்ல! வேலைவாய்ப்பு விளம்பரம் செய்த மருத்துவரை புலம்பவிட்டுட்டாங்களே
தேனி: மருத்துவமனை வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்த மருத்துவர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.
தேனியை சேர்ந்த மருத்துவர் சரவணகுமார் இது குறித்து பேஸ்புக்கில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "ஹாஸ்பிடல் ரிஷப்ஷன்ல வேலைக்கு ஆள் எடுக்கலாம்ன்னு முடிவு பண்ணோம். இளம் இரத்தத்தை பாய்ச்சலாம்ன்னு எக்ஸ்பீரியன்ஸ் தேவையில்ல ஃப்ரெஷ் கேண்டிடேட் வேணும்ன்னு விளம்பரம் பண்ணியிருந்தேன். ஃப்ரெஷ் கேண்டிடேட்ல டிகிரி முடிச்சவங்க எல்லாம் 2000க்கு அப்புறமா பிறந்தவங்க. இண்டர்வியூ ஆரம்பிச்சது... ரொம்ப வித்தியாசமான இண்டர்வியூ..!

வழக்கமா அவங்க இண்டர்வியூ வருவாங்க,வேலை குடுக்கிற நாங்க தானே கேள்வி கேக்கணும்.. இங்க அப்படியே ஆப்போஸிட். நாம கொடுத்திருந்த டெலிபோன் நம்பர்க்கு கால் பண்றாய்ங்க.
வேலைக்கு ஆள் வேணும்ன்னு போட்டிருந்தீங்க
ஆமாப்பா.. நேர்ல இண்டெர்வியூக்கு வாங்க.
என்ன வேலை..?
அதான், விளம்பரத்தில போட்டிருந்தேனே...
அதான் டீடெய்ல் சொல்லுங்க..!
பிரண்ட் ஆபிஸ் மேனேஜ்மெண்ட் பண்ணனும். கொஞ்சம் அக்கவுண்ட்ஸ் பார்க்கணும். அதான் வேலை..
அப்படீன்னா என்ன வேலை???!!!
விளக்கமா நேர்ல சொல்றேன் வாங்க.
என்ன டைமிங்?
காலையில 10 ல இருந்து மாலை 7 வரைக்கும் வேலை இருக்கும்.
4 மணிக்கு வீட்டுக்கு போற மாதிரி வேலை இல்லையா ?
4 மணிக்கு போய் என்னப்பா செய்ய போற?
இல்ல, 7 மணி வரைக்கும் வேலை பார்த்தா டயர்ட் ஆகிடும்.. அதான் பாக்றேன்.
சரி சம்பளம் பாதியா வாங்கிக்கிறியா??
பாதியா?? (சீரியஸா யோசிக்கிறான்). வீட்ல இருந்து பாக்குற மாதிரி வேலை இருக்கா? பார்ட்டைம், வொர்க் ஃப்ரம் ஹோம் மாதிரி..
ஃப்ரண்ட ஆஃபீஸை எப்படியா வீட்ல இருந்து பார்ப்ப.. போனை வையியா..
ஒன்னு இரண்டு இல்ல... சுமார் 70 - 80 பேர் கிட்ட இதே கதை...!
நடுவில தோழர் மகளிர் வேற... வாட்சப்லையே ஷார்ட்கட்ல பேசுறது..
வேலை இருக்கா?
இருக்கு!
நேரம்
10 to 7
சம்பளம்?
10000
வார விடுமுறை?
ஒரு நாள்
உணவு தருவீர்களா?
இல்லை
பயண செலவு தருவீர்களா?
உங்கள் தகுதி என்ன?
டிகிரிதான்.. ஆனால், சான்றிதழ்கள் இல்லை.
ஏன்? என்னாச்சு?
கல்லூரிக்கு போய் வாங்கவில்லை.. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.
உஷ்ஷ்ஷ்... பொறுமையிழந்து.. ஆர்வம் இருந்தால் நேரில் வாம்மான்னு சொல்லிட்டேன். என் வயசு, ஃபோட்டோ மட்டும் தான் கேக்கல.. மத்த எல்லாத்தையும் கேட்டுருச்சு. இன்னும் கேள்விகள் முடிஞ்ச பாடில்ல..! இவிங்க எல்லோரும் 2கே கிட்ஸ். இன்னொரு பக்கம் ஃபிரெஷ் கேண்டிடேட்ட்ஸ் வேணும்ன்னு சொல்லியும் 30 வயசுக்கு மேல சில 90'ஸ் கிட்ஸ் வேலை வேணும்ன்னு கதர்றாய்ங்க.. அவிங்க 2கே கிட்ஸ் மாதிரியே வாழ்க்கையை ஆரம்பத்தில விளையாட்டா எடுத்துகிட்ட க்ரூப்.
தெளிவா ப்ளான் பண்ணவன் எல்லாம் செட்டில் ஆகி கல்யாணம், புள்ள குட்டின்னு அடுத்த லெவலுக்கு போறான்.. இல்லேன்னா முதல் வட்டத்துலையே ரேஸ் குதிரையாட்டம் ஓடிட்டே இருக்காய்ங்க..! நடுவில ஒரு 80ஸ் கிட் என் செட்டு.. வேலை வேணும்ன்னு நிக்குறார்.. 40 வயசுலையும் நீ வேலை தேடிகிட்டிருந்தா இவ்ளோ நாள் என்ன தான்யா பண்ணன்னு கேட்டேன். வேலை தேடிட்டு இருந்தேன்னு பதில் சொன்னார்...! இவிங்களுக்கு மத்தியில ரிடையர்ட் ஆன ஒரு 60'ஸ் கிட் வேற வேலை கேட்டு வந்தார்.
இதுல இரண்டு க்ரூப் இருக்கு. ஒன்னு தேவைகள் அதிகம் உள்ளது, இன்னும் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இன்னொன்னு வேற என்ன செய்றதுன்னு தெரியாம போரடிக்குதுன்னு வேலைக்கு போறது...! ஃப்ரெஷ்ஷா வேணும்ன்னு சொன்னா அப்ப நாங்க எல்லாம் என்ன பண்றதுன்னு என்கிட்ட சண்டைக்கு வாறார்..! 2கே கிட்ஸ்ல ஒருத்தன் @நேர்ல வந்தான். எல்லாம் கேட்டுட்டு நாளைக்கு ஜாய்ன் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு போனான். காணோம். வாட்சப்ல சொந்தக்காரங்க இறந்துட்டாங்க நாளைக்கு வாறேன்னான்.
சரின்னு சொல்லிட்டேன். இன்னிக்கோட 27 நாள் ஆச்சு..! மறக்காம டெய்லி காலையில குட்மார்னிங் அனுப்பிட்டு ஏதாவது ஒரு பிரச்சனையை சொல்லி... இன்னிக்கு ஒரு நாள் விட்டுருங்க சார், நாளைக்கு கண்டிப்பா ஜாய்ன் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டிருக்கான். அந்த வேலைக்கு ஆளும் போட்டாச்சு ஆனாலும் இன்னும் மெசேஜ் அனுப்பிட்டிருக்கான் நானும் அவன்கிட்ட சரி சரின்னு சொல்லிட்டிருக்கேன். முடிவுல என்ன தான் நடக்குதுன்னு பார்க்கலாம்...
சுஜாதா சொல்லுவார் 28 வயசில் வேலை கிடைச்சு செட்டில் ஆகிடணும். இல்லேன்னா வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போக முடியாதுன்னு. இந்த. 2கே எல்லாம் 22,23 ல இருக்காய்ங்க. அம்மாகிட்ட சோறு ஊட்ட சொல்லி சாப்பிட்டுகிட்டு இருப்பாய்ங்க போல... இன்னும் 5 வருஷத்துல வாழ்க்கைன்னா என்னான்னு சமூகம் பாடம் சொல்லி கொடுக்கும்.... அதுவரைக்கும் இண்டர்வியூவே வைக்க போறதில்ல." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications