தேனியில் சாமி கும்பிட போன புதுமண தம்பதி.. எமனமாக காத்திருந்த துப்பட்டா..கடைசியில் இப்படியா ஆகணும்
தேனி: தேனி மாவட்டம் போடி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் என்பவருடைய மகள் தீபிகா போடி கோர்ட்டில் ஊழியராக வேலை செய்து வந்தார். தீபிகாவுக்கும், போடி ஜமீன் தோப்பு தெருவை சேர்ந்த தீபக்ராஜா என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவருடன் பைக்கில் சென்ற தீபிகாவிற்கு, அவரது துப்பட்டாவே எமனாக மாறி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். அதுவும் சேலை அணிந்து செல்வோர், துப்பட்டா அணிந்து சுடிதார் போட்டு செல்வோர், சேலையின் முனையோ, துப்பட்டாவின் முனையோ இருசக்கர வாகனத்தில் சிக்காத அளவிற்கு அமர்ந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு மட்டுமல்ல.. நம்பியுள்ள குடும்பத்தினருக்கும் தீராத வலியை ஏற்படுத்திவிடும். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்9 பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் என்பவருடைய மகள் தீபிகாவுக்கு 29 வயது ஆகிறது. இவர், போடி கோர்ட்டில் ஊழியராக வேலை செய்து வந்தார். தீபிகாவுக்கும், போடி ஜமீன் தோப்பு தெருவை சேர்ந்த தீபக்ராஜா என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது
இந்தநிலையில் புதுமண தம்பதி இரண்டு பேரும், போடி அருகே முந்தல் பகுதியில் உள்ள கீழ சொக்கையா சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி, நேற்று காலை தீபிகாவும், தீபக்ராஜாவும் அந்த கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அங்கு கோவிலில் சாமி கும்பிட்டவுடன் 2 பேரும் போடி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தீபக்ராஜா ஓட்டினார். சுடிதார், துப்பட்டா அணிந்தபடி தீபிகா பின்னால் அமர்ந்து வந்துள்ளார்.
போடி அருகே முந்தல் சாலையில், ஆண்டி ஓடை என்ற பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் தீபிகாவின் துப்பட்டா சிக்கிக்கொண்டது. இதில், நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தீபிகா சாலையில் வேகமாக விழுந்தார். அப்போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் உயிருக்கு போராடினார். மோட்டார் சைக்கிளை உடனடியாக நிறுத்திய தீபக்ராஜா, தனது கண்முன்னே மனைவி உயிருக்கு போராடுவதை பார்த்து செய்வதறியாது கண்ணீருடன் உதவி கேட்டார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீபிகாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தீபிகா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டதும் அவரது கணவர் தீபக்ராஜா, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கலங்க வைத்தது.
இந்த சம்பவம் குறித்து ஈஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக்கில் சென்றபோது, சக்கரத்தில் துப்பட்டா சிக்கி புதுப்பெண் பலியான சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications