தேனியில் குருவை வீழ்த்தும் சிஷ்யன்.. டிடிவிவிக்கு ஷாக் தரும் தங்க தமிழ் செல்வன் - தந்தி டிவி ரிசல்ட்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி லோக்சபா தொகுதியில் குரு டிடிவி தினகரனை திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் வீழ்த்த வாய்ப்புள்ளதாக தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Lok Sabha election 2024 TTV Dhinakaran AMMK Thanga Tamilselvan DMK 2024


முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

அதன்படி தந்திடிவி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி நிலவரங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதில் தேனி தொகுதிக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.


தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் நாராயணசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் களமிறங்கினார். நாம் தமிழர் சார்பில் மதன் வேட்பாளராக களத்தில் உள்ளார்.

இந்நிலையில் தான் தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி தங்க தமிழ்செல்வன் 35 சதவீத ஓட்டுகளை பெற்று வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர் தன்னை எதிர்த்து போட்டியிடும் குருவான அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை வீழ்த்துவார் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது அமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் திமுக சென்ற நிலையில் அவர் டிடிவி தினகரனை வீழ்த்து வெல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் டிடிவி தினகரனுக்கு 31 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஏற்கனவே தேனி எம்பியாக இருந்த நிலையில் மீண்டும் அங்கு களமிறங்கி வாகை சூட நினைத்தார். ஆனால் இந்த கருத்து கணிப்பு அவருக்கு அதிர்ச்சி வைத்தியமாக மாறி உள்ளது. மேலும் இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு 21 சதவீதம் ஓட்டுகள் பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி என்பது ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டம். ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக மாறியது உள்ளிட்டவை தான் அதிமுக 3வது இடத்துக்கு செல்ல முக்கிய காரணமாக மாறி உள்ளது.

மேலும் தேனி தொகுதியை பொறுத்தமட்டில் இந்த முறை கூட்டணி கட்சிக்கு வழங்காமல் திமுக வைத்து கொண்டது. கடந்த முறை காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரான ஓ பன்னீர் செல்வம் மகன் ஓபி ரவீந்திரநாத்திடம் தோல்வியடைந்தார். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி என்ற திமுகவின் கனவு கலைந்தது.

அதாவது கடந்த முறை தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வென்ற நிலையில் தேனியில் மட்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோற்றார். இதனால் இந்த முறை தேனியில் வெல்லும் முனைப்பில் திமுகவே அங்கு களமிறங்கியது. இதற்கு கைமேல் பலனாக திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் வெற்றி பெறுவார் என தந்தி டிவியின் தேர்தலுக்கபிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+