தேனியில் கன்னிப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் கணவன் ஆயுள் கூடும்.. டூவீலரில் சிறுமியை தூக்கிய மனைவி
தேனி: கணவனுக்கு ஆயுள் கூட வேண்டுமானால், அதற்கு எத்தனையோ வழிமுறைகளை முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.. ஆனால், தேனியில் ஒரு பெண், விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.. இதையடுத்து, நீதிமன்றமே அந்த பெண்ணை தண்டித்திருக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி, இந்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது.. தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த கணவனுக்கு 56 வயதாகிறது.. இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.. இவரது மனைவிக்கு 48 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 14 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அங்குள்ள பள்ளி ஒன்றில் இந்த குழந்தை 9ம் வகுப்பு படித்து வந்திருக்கிறாள்.

திண்டுக்கல் பழைய வத்தலகுண்டு
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு ரைஸ்மில் தெருவில் வசிக்கும் கூலி தொழிலாளியான அழகுராஜாவுக்கும், அவரது மனைவி ராமலட்சுமிக்கும் ஜோசியம் பார்க்கும் பழக்கம் உண்டு... ராமலட்சுமிக்கு 25 வயதாகிறது.. அழகுராஜாவுக்கு 32 வயதாகிறது.
சிறுமியுடன் கணவர் உல்லாசமாக இருந்தால், ஆயுள் கூடும் என்று ஜோசியர் ஒருவர், ராமலட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.. உடனே, ராமலட்சுமியும், சிறுமி யாராவது கிடைப்பார்களா? என்று பெரியகுளம் முழுவதும் வலைவீசி தேடினார்..
டூவீலரில் தேடிய ஜோசியக்கார பெண்
ஒருவேளை சிறுமி யாராவது கிடைத்தல், கையோடு வீட்டுக்கு அழைத்து சென்றுவிடலாம் என்று நினைத்து, டூவீலரில் தேட ஆரம்பித்தார்.. அப்போதுதான், தன்னுடைய வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்த ஆட்டோ டிரைவரின் 14 வயது மகளை பார்த்தார்.. அந்த குழந்தையிடம் சென்று ஆசை வார்த்தைக்கூறி, டூவீலரில் ஏற்றிக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பழைய வத்தலக்குண்டு ரைஸ்மில் தெரு பெருமாள் கோயில் அடிவாரத்தில்தான், ராமலட்சுமியின் வீடு உள்ளது.. வீட்டிற்குள் சிறுமியை அழைத்து சென்ற ராமலட்சுமி, அந்த சிறுமியையும், கணவனையும் ஒரே அறையில் வைத்து பூட்டிவிட்டார்.. பிறகு, 14 வயது சிறுமியை அழகுராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்..
ஆட்டோ டிரைவர் புகார்
இதனிடையே விளையாடி கொண்டிருந்த மகளை காணாமல் ஆட்டோ டிரைவர் வலைவீசி தேடினார். பிறகு போலீசில் சென்று புகார் தந்ததையடுத்து, 2021 அக்., 28ம் தேதி, வழக்கு பதிவு செய்யப்பட்டு, காணாமல் போன சிறுமியை தேட ஆரம்பித்தனர். மறுநாளே, சிறுமியை டூவீலரில் கொண்டுவந்து வீட்டுக்கு அருகில் இறக்கிவிட்டு, அழகுராஜா, ராமலட்சுமி தம்பதியினர் தப்பி சென்றுவிட்டனர்.
இதற்கு பிறகுதான், மொத்த விஷயமும் வெளியே தெரிந்து, பெற்றோரும், காவல்துறையும் அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு, இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அழகுராஜா, ராமலட்சுமியை கைது செய்யப்பட்டனர்..
தேனி கோர்ட் அதிரடி தீர்ப்பு
2021 டிசம்பர் 16ல் போக்சோ பிரிவு இதில் சேர்க்கப்பட்டது. தேனி போக்சோ சிறப்பு கோர்ட்டில் இது தொடர்பான விசாரணையும் நடந்து வந்த நிலையில், இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. அரசு தரப்பில் வழக்கறிஞர் ரஷீதா ஆஜரானார். இறுதியில், அழகுராஜா, ராமலட்சுமிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை, ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications