200 பேருக்கு மட்டுமே இடம்.. 334 கைதிகள் அடைப்பு.. தேனி சம்பவத்தில் 9 காவலர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் நேற்று இரவு 17 விசாரணை கைதிகள், காவலர்களை தாக்கிவிட்டு ஒரேநேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர். தப்பியோடியவர்களில் 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை காவலர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி மாவட்ட சிறை உள்ளது. இந்த சிறையில் 200 கைதிகள் மட்டுமே அடைப்பதற்கான வசதியுள்ள நிலையில், 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்துள்ளனர். ஒரே அறையில் 17 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு 10.30 மணிக்கு கைதி ஒருவருக்கு வலிப்பு நோய் வந்ததாக சிறைக் காவலர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறைக் காவலர்கள் கதவைத் திறந்து உள்ளே நிலையில் 4 காவலர்களை தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Theni Prisoner tvk

தேடுதல் வேட்டை

இதையடுத்து, தப்பியோடியவர்கள் கைது செய்ய 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நக்சல் சிறப்பு பிரிவினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள மலை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது. தாக்குதலுக்குள்ளான காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த தாக்குதலில் சிறைக் காவலர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

13 கைதிகளை தேடும் பணி தீவிரம்

17 கைதிகள் தப்பியோடிய நிலையில், தமிழக கேரள எல்லை குமிழி, கம்பம், போடிமெட்டு பகுதியிலும் தேடுதல் பணி நடந்து வருகிறது. சிறை வளாகத்திற்கு பின்னால் உள்ள காட்டு பகுதியில் மதுரை பெருங்குடியை சேர்ந்த பிரவீன் என்கிற கைதி பிடிபட்டார். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதேபோல மதுரையை சேர்ந்த ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மீதமுள்ள 13 பேரை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மாவட்ட சிறை அமைந்திருக்கக்கூடிய தேக்கம்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள பங்குவார்பட்டி, மணிக்கூண்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும், மலையடிவார விவசாய தோட்டப் பகுதியிலும், காட்டுப் பகுதியிலும் கைதிகள் பகுதியுள்ளனரா என்பதைக் கண்டறியும் வகையில் ட்ரோன்கள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

9 பேர் சஸ்பெண்ட்

கிராமப்புறங்களில் புதிதாக ஏதேனும் கைதிகள் பதுங்கியுள்ளனரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் தேனி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட காவல் துறையினர் பல குழுவாகப் பிரிந்து சோதனைப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கெளதம் தேக்கம்பட்டி சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் இருந்து சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் விமானம் மூலமாக மதுரை வந்துள்ளார். இந்த சம்பவத்தில், இதுவரை 9 சிறைத் துறை காவலர்களை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+