போலீஸ் ஸ்டேஷன் டாய்லெட்டில் தூக்கு.. தமிழகத்தையே அதிர வைத்த சம்பவம்! விடிய விடிய துருவிய சிபிசிஐடி!

Subscribe to Oneindia Tamil

தேனி: லாரி தீப்பற்றி எரிந்த வழக்கு தொடர்பாக செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பணியில் இருந்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். நேற்று காவல் நிலையம் சென்ற அவர்கள் அங்கிருந்த ஆவணங்கள், சிசிடிவி பதிவுகள் குறித்து காவலர்களிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்திய நிலையில் இன்றும் விசாரணை தொடர்கிறது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் கடந்த 3 ந்தேதி தேவாரத்தில் இருந்து 2.5 கோடி மதிப்பிலான ஏலக்காய் மூடைகள் ஏற்றி வந்த போது உசிலம்பட்டி - மதுரை சாலையில் உள்ள வாலாந்தூர் கண்மாய் கரை அருகே லாரி தீப்பற்றி எரிந்தது.

Theni Police Station CBCID

இதுதொடர்பாக வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் வாலாந்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளரான செக்கானூரணி காவல் ஆய்வாளர், முத்து பாலகிருஷ்ணனை 13 ந்தேதி இரவு விசாரணைக்காக அழைத்து வந்து காவல் நிலையத்தில் இரவு முழுவதும் தங்க வைத்திருந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஓட்டுனர் தற்கொலை

இந்நிலையில் 14ஆம் தேதி அதிகாலையில் காவல் நிலைய கழிப்பறைக்கு சென்ற பாலகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த ஓட்டுனரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் உரிய நீதி கேட்டு தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக பணியிலிருந்த காவல் ஆய்வாளர் முத்து மற்றும் தலைமை காவலர் பழனிவேல் ராஜன் பெண் காவலர் கலைச்செல்வி ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்தும் , இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டிருந்தார்.

சிபிசிஐடி

இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட மூவரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளாக குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் ஆனந்தராஜா சுமார் பத்து மணி நேரத்திற்கு மேலாக காவல் ஆய்வாளர் முத்து, காவலர்கள் பயன்கள் ராஜன், கலைச்செல்வி உள்ளிட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு ஆய்வறிக்கையை தயார் செய்து சென்றார்.

விசாரணை தொடக்கம்

இந்த நிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் பாலகிருஷ்ணன் ஒட்டி வந்த கண்டெய்னர் லாரி தீப்பற்றிய இடத்தை நேற்று மாலை ஆய்வு செய்த நிலையில் இரவு 9:30 மணி அளவில் செக்கானூரணி காவல் நிலையம் வந்த சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர். காவல் நிலையம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர் கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து பாலகிருஷ்ணன் உயிரிழந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

மீண்டும் விசாரணை

தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பின்னர் ஆய்வாளர் முத்து மற்றும் பெண் காவலர் கலைச்செல்வி, தலைமை காவலர் பழனிவேல் ராஜன் ஆகியோரிடம் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் முதற்கட்ட விசாரணையை நிறைவு செய்து வழக்கு தொடர்பான கோப்புகளை கைப்பற்றி காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டசென்ற நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+