வாய் பேச முடியாத மகளை பலாத்காரம் செய்த கயவன்- 7 வருடம் காத்திருந்து பழிதீர்த்த அப்பா
தேனியில் வாய் பேச முடியாத மகளை பலாத்காரம் செய்து அவளது மரணத்திற்குக் காரணமான நபரை 7 வருடங்கள் காத்திருந்து கொன்று பழிக்குப் பழி தீர்த்துக்கொண்டார் கோச்சடையான் என்ற நபர்.
தேனி: சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ரத்னவேல் பாண்டியனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார் கோச்சடையான். மகளின் மரணத்திற்குக் காரணமான அவரை ஏழு ஆண்டுகள் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கியுள்ளார். தேனி மாவட்டத்தில் இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பழிக்குப் பழி கொலை செய்யும் கதைகள் இப்போது அரிதாகி வருகிறது. 1980,90 களில் மகளை பலாத்காரம் செய்து கொன்ற வில்லனை பழிக்குப் பழியாக கொலை செய்வார் ஹீரோ. 2000 ஆண்டுகளில் இதுபோன்ற கதைகள் அரிதாகிவிட்டது.
பழைய தமிழ் சினிமா கதையில் வரும் சம்பவம் போல செல்ல மகளை பலாத்காரம் செய்து அவளது மரணத்திற்குக் காரணமாக இருந்த கொடியவனை வெட்டிக்கொன்று பழிக்குப் பழி வாங்கியுள்ளார் ஒரு தந்தை. அவரை தேனி மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.

செல்ல மகள்
சின்னமனூர் அருகே சீலயம்பட்டி கிராமத்தில் தனது வாய் பேச முடியாத மகளுடன் வசித்து வந்தார் கோச்சடையான். மகள்தான் அவருக்கு எல்லாமே. அவள் மீது உயிரையே வைத்திருந்தார். பூப்போல தாங்கினார் கோச்சடையான். எதற்கும் கண் கலங்க விடமாட்டார். செல்ல மகளுக்கு எமன் பக்கத்து வீட்டிலேயே இருக்கிறான் என்று கோச்சடையானுக்குத் தெரியாது.

சிறுமி தற்கொலை
கடந்த 2013ஆம் ஆண்டு தனது மகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்றிருந்தார் கோச்சடையான். திரும்பி வந்து பார்த்த போது மகள் சிதைந்து போயிருந்தாள். பக்கத்து வீட்டில் வசித்த ரத்னவேல் பாண்டியன் என்ற கொடூரன், வாய் பேச முடியாத அந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டான். தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியில் சொல்ல முடியாமல் புழுங்கிய சிறுமி மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டார்.

ரத்னவேல் பாண்டியனுக்கு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்து அவளது மரணத்திற்குக் காரணமான கயவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரே மகளை இழந்து விட்டோமே என்று வேதனையில் வாடினார் கோச்சடையான். 7 ஆண்டுகள் கழித்து ஜாமீனில் வந்த ரத்னவேல் பாண்டியனை பார்க்க பார்க்க கோச்சடையானுக்கு ரத்தம் கொதித்தது. பார்க்கும் போதெல்லாம் சண்டை போட்டார்.

பழிக்குப் பழி
மகளின் மரணத்திற்குக் காரணமானவனை கொல்ல வேண்டும் என்று திட்டம் போட்டு கையில் அரிவாளுடன் காத்திருந்தார் கோச்சடையான். தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த ரத்தினவேல் பாண்டியனை ஒரே போடாக போட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்ததைப் பார்த்து விட்டு தப்பி ஓடினார் கோச்சடையான். மகளின் மரணத்திற்குக் காரணமாக இருந்தவனை ஏழு வருடங்கள் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கினார் கோச்சடையான்.

சிறைக்குப் போன கோச்சடையான்
பட்டப்பகலில் கொலை செய்த கோச்சடையானை போலீசார் கைது செய்தனர். ஏழு ஆண்டுகளாக மகளின் மரணத்திற்காக வேதனையில் நொந்து போயிருந்த கோச்சடையான், பழிக்குப் பழி வாங்கிய திருப்தியோடு சிறைக்குப் போனார். சினிமா கதை போல நடந்த இந்த சம்பவம் தேனியில்பரபரப்பாக பேசப்படுகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications