தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா.. வேட்பு மனு தாக்கலில் அசத்திய நாம் தமிழர் ஷாகுல் ஹமீது

Google Oneindia Tamil News

Recommended Video

    வேட்பு மனு தாக்கலில் அசத்திய நாம் தமிழர் ஷாகுல் ஹமீது-வீடியோ

    தேனி: காணும் பொங்கலுக்கு எங்கோ மாட்டு வண்டியை கிளப்பி கொண்டு போவது போலதான் முதலில் பார்ப்பதற்கு தெரிந்தது.. பிறகு தான் விஷயம் புரிந்தது, மாட்டு வண்டியில் போய் கொண்டிருப்பது கட்சி வேட்பாளர் என்பது!

    அவர் பெயர் சாகுல் ஹமீது. தேனி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர். சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதாலோ என்னவோ அவரது வேட்பாளரும் அப்படியே காட்சியளித்தார்.

    தேனி மதுரை சாலை பங்களா வீட்டில் இருந்து 3 மாட்டு வண்டிகளை அலங்காரம் செய்தார். அந்த வண்டியில் கரும்பு, தட்டை, மண்வெட்டி இப்படி விவசாயம் சார்ந்த பொருட்களை எல்லாம் உள்ளே தூக்கி போட்டு கொண்டார்.

    குடும்பத்துக்கு 10 லிட்டர் பிராந்தி தர்றேன்.. சந்தோஷமா இருங்க.. ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு! குடும்பத்துக்கு 10 லிட்டர் பிராந்தி தர்றேன்.. சந்தோஷமா இருங்க.. ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு!

    கட்சி கொடி

    கட்சி கொடி

    நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். வண்டியில் கொஞ்சம் பேர் ஏறி நின்று கொண்டனர். அதில் ஒருவர் கட்சி சின்னத்தை பிடித்தபடியே நிற்கிறார். இன்னொருவர் கட்சி கொடியை பிடித்து கொண்டார்.

    உற்று நோக்கினர்

    உற்று நோக்கினர்

    இப்போது வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போக... தொண்டர்கள் பின்னே போக.. இதை பொதுமக்கள் அனைவருமே உற்று நோக்கினர்.

    வேட்பு மனு தாக்கல்

    வேட்பு மனு தாக்கல்

    இப்படியே தேனி மாவட்ட கலெக்டர் ஆபீசு வரை மாட்டு வண்டி ஊர்வலம் வந்தது. இறுதியில் வேட்புமனுவையும் தாக்கல் செய்த சாகுல் ஹமீது இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

    சரி செய்வேன்

    சரி செய்வேன்

    "நான் ஒரு சமூகப் போராளி. விவசாயம் சார்ந்த குறைகளை தேனி மாவட்டத்தில் முழுவதும் அகற்றுவதே என் லட்சியம். இதைதவிர தொகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்படும் என்றார்.

    English summary
    Nam Tamizhar Katchi Theni Candidate filed MP Election nomination in differently
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X