4வது நாளாக தொடரும் மேகமலை வருசநாடு மக்கள் போராட்டம்.. பல்வேறு சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் வருசநாடு மலை கிராம மக்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4வது நாளாக மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் பல தலைமுறைகளாக மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் விவசாய தொழிலை மேற்கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இலவம், முந்திரி, மிளகு, ஏலம் உள்ளிட்டவற்றை விளைவித்து வருகின்றனர்.

theni varusanadu

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 98 மலை கிராம மக்களை வனத்துறை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், இன்று (செப்டம்பர் 29) உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வரவிருக்கும் விசாரணையின் முடிவுகள் மலை கிராம மக்களுக்கு ஆதரவாக வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர்ந்து நான்கு நாட்களாக இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்துள்ளது. கடமலைக்குண்டு வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறங்களிலும் உள்ள டீக்கடை, ஹோட்டல், மளிகை கடை உள்ளிட்ட பெரும்பாலான கடைகளை அடைத்து வணிகர் சங்கம், ஹோட்டல் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று நடைபெறும் வருசநாடு மலை கிராம மக்களின் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று உச்ச நீதிமன்றத்தில் மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அதை எதிர்நோக்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மலை கிராம மக்களும் ஆர்வமாக உள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்து தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறான தகவல்களை அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தலைமுறை தலைமுறையாக வாழும் தங்களுக்கு 2006 வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+