“சீஃப் கெஸ்ட்” சிவாங்கி.. திரண்ட ரசிகர்கள்! திணறிய தேனி - வாகன ஓட்டிகள் புலம்பல்
தேனி: கம்பம் நகரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த நடிகையும் பாடகியுமான சிவாங்கியை பார்ப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள குமுளி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நவரத்னா என்ற தனியார் நகைக்கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நகை கடையின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக விஜய் டிவியின் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் பிரபலமான பின்னனி பாடகி சிவாங்கி கலந்து கொண்டார்.

சிவாங்கி சிறப்பு விருந்தினராக வருவதை அறிந்த கம்பம் மக்கள் நகைக்கடை முன்பாக காலையிலிருந்தே திரண்டு நின்றனர். சிவாங்கி நகைக் கடைக்கு காரில் வந்து இறங்கியவுடன் அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர்.
ரசிகர்கள் மத்தியில் சிவாங்கி பேசுவதற்காக நவரத்னா நகைக் கடையின் வாயிலில் மேடை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. மக்களின் கூட்டத்துக்கு மத்தியில் ஒருவழியாக சிவாங்கி மேடையேறி பேசத் தொடங்கினார். சிவாங்கி பேச்சை கேட்டு பொதுமக்கள் கூச்சலிட்டனர்.

அவரை காண நகைக்கடைக்கு வந்த ரசிகர்கள் சாலை முழுவதும் ஆர்ப்பரித்து நின்றனர். கடைக்கு வெளியே மேடை அமைக்கப்பட்டதால் சாலையில் அதிகளவிலான பொதுமக்களின் கூட்டம் நின்றது. இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நகைக் கடை திறப்பு விழாவால் அதிகப்படியான வாகனம் செல்லும் தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து பாதிப்புக்கு உள்ளானாகினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications