அண்ணன் ஓபிஎஸ் பத்தி பேசுங்க.. கூட்டத்தில் இருந்து வந்த குரல்.. கடுகடுத்த டிடிவி தினகரன்
தேனி: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் அதிமுக மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. டிடிவி தினகரன் தேனியில் பிரச்சாரம் செய்யும்போது, கூட்டத்தில் ஒருவர் ஓபிஎஸ் குறித்து பேச சொன்னார். அதற்கு தினகரன் சட்டென டென்ஷனாகி அளித்த பதில் வைரலாகிறது.
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தேனியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், "தமிழ்நாடு மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிலவுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் போராடி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மீண்டும் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைந்தால் தான் பிரச்சனைகள் சரியாகும். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சி மலரும்.

அண்ணன் தம்பி சண்டை
அக்கா தங்கை சண்டை, அண்ணன் தம்பி சண்டை போல தான் அதிமுக அமமுக சண்டையும். சண்டை போட்டவர்கள் எல்லாம் இப்போது சமாதானமாக இல்லையா. நமக்குள் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா, சொத்து பிரச்சனையா. நாம் சண்டை போட்டதால் திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக எந்த ரூபத்திலும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம். மீண்டும் திமுக வந்தால் தமிழகம் அழிந்துவிடும்.
5 வருடங்களில் திமுக 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதுவரை கேள்விபடாதளவுக்கு கடன் சுமை வந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் ஊழல்கள் நடக்கிறது. அனைத்து அமைச்சர்களின் ஊழல்களிலும் ஒரு குடும்பம் பயனடைகிறது. தமிழகத்தில் கஞ்சா, போதை உள்ளிட்ட கலாச்சாரம் ஒழிய வேண்டும்" என்றார். அப்போது, " அண்ணன் ஓபிஎஸ் பற்றி பேசுங்க" என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் 3 முறை சொன்னார்.
கடுப்பான டிடிவி
அதற்கு டிடிவி தினகரன், "அட இருங்கய்யா. ஏங்க வீணா போனவங்களை பத்தி எல்லாம் பேச சொல்றீங்க என்று சட்டென டென்ஷன் ஆனார். சிறிது நேரம் பொதுவான அரசியல் பேசிவிட்டு, ஓபிஎஸ் குறித்து வாய் திறந்தார். அப்போது டிடிவி தினகரன், கட்சியால் பதவிகள், கட்சியால் நகர்மன்ற தலைவர் பதவி, மந்திரி பதவி, முதல்வர் பதவி கொடுத்தும் இந்த 75 வயதில் மோசமான செயலை யாராவது செய்யலாமா.
அதிமுகதான் அவருக்கு அட்ரஸ் கொடுத்தது. அவர் போன்றவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். நம் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்" என்று கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications