சொத்து கேட்டு தகராறு.. காதல் மனைவியின் அத்தையை வெட்டிக்கொன்ற இளைஞர்
தேனி: உத்தமபாளையம் அருகே சொத்தில் பங்கு கேட்டு காதல் மனைவியின் அத்தையை படுகொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனிமாவட்டம் உத்தமபாளையம் அருகே அனுமந்தம்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருடைய சகோதரர் நாகராஜ் என்பவருடைய மகன் வளர்மதியை அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

அதன் பிறகு வளர்மதிக்கு சேரவேண்டிய சொத்துக்களை அவரது அத்தையான லட்சுமியிடம் கேட்டு வடிவேலு தொந்தரவு செய்து வந்தாராம்.
இந்நிலையில் நேற்று இரவு லட்சுமியின் வீட்டருகே சென்ற வடிவேல், சொத்தில் பங்கு தரும்படி மீண்டும் தகராறு செய்தாராம்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில், வடிவேல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லட்சுமியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த உத்தமபாளையம் போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து வடிவேலை போலீசார் தேடிவருகின்றனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications