விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்த விந்தியா.. வேனில் பார்த்தால் சீட் கிடைக்காத சிட்டிங் எம்எல்ஏ!
தேனி: தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில் சையதுகான் என்பவர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவர் விந்தியாவுடன் பிரச்சார வாகனத்தில் வரவில்லை. அதேநேரம் அப்போது வேனில் சீட் கிடைக்காத சிட்டிங் எம்எல்ஏவான ஜக்கையன் நின்று கொண்டிருந்தார். அப்போது விந்தியா சையதுகானுக்கு ஓட்டு போடுங்கள் என்று விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்தார். வேட்பாளர் இவரு இல்லையே என்று முணுமுணுத்தபடியே ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தல் களம் படுஸ்பீடாக உள்ளது. அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களும், திமுகவின் நட்சத்திர பேச்சாளர்களும் களத்தில் இறங்கி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.,
களத்தில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான விஷயங்களை வேட்பாளர்கள் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். டீ போட்டு கொடுப்பது, டீ குடிப்பது, துணி துவைத்து கொடுப்பது. கண்ணீர் விட்ட அழுது உருக்கமாக பேசுவது , ஆவேசத்துடன் பேசுவது, மிரட்டுவது என தேர்தல் களம் படுஅமர்களமாக உள்ளது.

தினகரன் ஆதரவு
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ராமகிருஷ்ணன், அதிமுக சார்பில் சையதுகான் உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர். கம்பம் தொகுதியில் கடந்த முறை வென்ற ஜக்கையனுக்கு இந்த முறை சீட் கிடைக்கவில்லை. டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்து கடைசி நேரத்தில் மனம் மாறி எடப்பாடியை ஆதரித்தார் என்பதால் இந்த முறை சீட் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கம்பம் வேட்பாளர்
அதேநேரம் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவளரான சையதுகான் கம்பம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளதுடன், தொகுதியில் அதிகம் உள்ள கவுண்டர்கள் உள்ள பிற சமூகத்தினருடனும் நெருக்கமான தொடர்பில் உள்ளவர் என்பதால் சையதுகான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பிரச்சாரம்
சையதுகான் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் சில இடங்களில் நேரடியாக சையதுகானை ஆதரித்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அப்படித்தான் சையதுகானை ஆதரித்து, அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா கம்பம் மெயின்ரோடு சிக்னல் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

வேடிக்கை பாரத்த மக்கள்
பிரச்சாரத்தின் போது வேட்பாளர் சையதுகான் வரவில்லை. வாகனத்தில் கம்பம் சிங்டிங் எம்எல்ஏவான ஜக்கையன் நின்று இருந்தார். விந்தியா பேசும் போது, சையதுகானுக்கு ஓட்டுப்போடுங்கள் எனக்கூறினார்கள். விந்தியாவை வேடிக்கை பார்க்க பெண்கள் கூட்டம், வேட்பாளர் யார் என்று தெரியாமல், இவர்தான் வேட்பாளரா என்று கேட்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications