Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் எதிர்ப்பில் கூட நில்லுங்க.. எல்லா பெருமையையும் அதிமுகவுக்கே கொடுத்துடுறோம்.. உதயநிதி அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

தேனி: நீட் தேர்வு எதிர்ப்பில் எங்களுடன் துணை நில்லுங்கள், நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைத்தால் அந்த பெருமையை அதிமுகவுக்கே வழங்கி விடுகிறோம் என மீண்டும் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

We will give that all credits to AIADMK: Udhayanidhi stalin again invites edappadi palanisamy

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி கையெழுத்து இயக்கத்தை அண்மையில் தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசிய உதயநிதி, தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் கல்வி உரிமைக்காகவும், நீட் விலக்குக்காகவும் அதிமுக இந்த இயக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும். பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதுதான் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டதாகச் சொல்கிறீர்கள். அதிமுக-வுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அதிமுகவினரும் வாருங்கள். நீட் ஒழிப்புக்காக சேர்ந்து போராடலாம்" எனத் தெரிவித்தார்.

இதற்கு அதிமுக தரப்பில் கடும் விமர்சனங்கள் வந்தன. ஆட்சிக்கு வந்ததும்‌ ஒரே கையெழுத்தில்‌ நீட்டை ஒழித்து விடுவேன்‌ என்று வாய்‌ வீரம்‌ காட்டிய இன்றைய முதலமைச்சரும்‌, அவருடைய வாரிசும்‌. விரைவில்‌ நாடாளுமன்றப்‌ பொதுத்‌ தேர்தல்‌ நடைபெற உள்ளதை அறிந்து, மீண்டும்‌ நீட்‌ எதிர்ப்பு போராட்டத்தை கையில்‌ எடுத்துள்ள வாரிசு, நீட்டிற்கு எதிராக 50 லட்சம்‌ கையெழுத்து இயக்கத்தைத்‌ தொடங்கியுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தேனியில் நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், "பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்படி விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது விமானி இல்லாமல் கூட செல்லுவார் ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார். மோடியை கண்டு திமுக அச்சப்படுவதாக பாஜக கூறுகிறது. மோடியைக் கண்டு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞரின் குடும்பம் தான் வாழ்கிறது என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்கிறார். தமிழ்நாடு மக்கள் முழுவதுமே கலைஞர் குடும்பம் தான். உழைப்பால் உயர்ந்து உழைப்பின் மூலமே இன்று தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வைத்து வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்." என்றார்.

மேலும் பேசிய உதயநிதி, "பாஜகவின் அழுத்தத்தால் அதிமுக நீட் தேர்வை உள்ளே நுழைத்தது. தற்போது நீட் தேர்வு எதிர்ப்பில் எங்களுடன் துணை நில்லுங்கள், நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைத்தால் அந்த பெருமையை அதிமுகவுக்கே வழங்கி விடுகிறோம். நீட் தேர்வை அரசியலாக்க வேண்டாம். மாணவர்களுக்காக ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம்.

எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக அல்ல, மக்களுக்கானது. நீட் தேர்வு ரத்தானால் அதன் ஒட்டு மொத்த பெருமையையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்." என மீண்டும் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+