தேனி அருகே அரசு இன்ஜினியரிங் கல்லூரி விடுதி கழிவறையில் மாணவர் இருந்த கோலம்.. ஆடிப்போன தந்தை
தேனி: போடி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் 3ம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து வந்தார். இதற்காக அங்குள்ள அரசு கல்லூரி விடுதி தங்கியிருந்தார் விக்னேஷ்.. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை விடுதியின் கழிப்பறைக்கு சென்ற மாணவர் மீண்டும் திரும்பி வரவே இல்லை.. உறவினர்கள் இந்த விவாகரத்தில் கூறுவது என்ன என்பது பற்றி பார்ப்போம்.
தேனி மாவட்டம் போடி- தேவாரம் சாலையில் உள்ள மேலச்சொக்கநாதபுரம் பகுதியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கான விடுதி கல்லூரியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

போடி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியில் உள்ள பர்கீன்மா நகரை சேர்ந்த செல்வம் என்பவருடைய மகனாகிய 21 வயதாகும் விக்னேஷ் என்பவர் படித்து வந்தார். விக்னேஷ் 3-ம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து வந்தார்.
மாணவர் விக்னேஷ், நேற்று முன்தினம் காலை விடுதியில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இரவு மாணவர்கள் கழிப்பறைக்கு சென்று கதவை தட்டியபோது அவர் திறக்கவில்லை என கூறப்படுகிறது. உடனே இதுகுறித்து விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அவர் வந்து கதவை உடைத்து பார்த்தபோது விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை கண்ட மாணவர்கள் ஆடிப்போனார்கள்.
இதுகுறித்து போடி தாலுகா போலீசாருக்கு மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாணவரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
அப்போது விக்னேஷின் பெற்றோர், தங்களது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். பின்னர் மாணவர் விக்னேசின் பெற்றோர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணனிடம், மாணவர் விக்னேசின் தந்தை செல்வம் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், 'எனது மகனின் மரணத்தில் சந்தேகங்கள் உள்ளன. எனது மகன் மரணம் கொலையாக இருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறேன். எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த சம்பவத்தால் தேனி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications