"உங்களுக்கு தெரியும் யாரை பற்றி சொல்றேன் என்று".. பாஜகவை தேனியில் சம்பவம் செய்த நடிகர் கார்த்திக்
தேனி: நாடாளுமன்றத்தையே மாற்றிவிட்டாங்க.. இந்தியாவை மாற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்.. இந்தியாவை நல்ல விதமாக மாற்றினால் பரவாயில்லை.. எதேச்சதிகாரம் வந்தால் என்ன பண்ணுவீங்க என்று நடிகர் கார்த்திக் கேள்வி எழுப்பினார்.
தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து நடிகர் கார்த்திக் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். செய்தியாளர் ஒருவர் கேட்கும் போது, பாஜக கூட்டணியில் மீண்டும் மோடி தான் பிரதமர் என்ற பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்கள்.

இந்தியா கூட்டணி சார்பில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை தெளிவுப்படுத்தவில்லை.. அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை.. அதிமுகவின் வேட்பாளர் குறித்த நிலைப்பாடு என்ன.. என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நடிகர் கார்த்திக், "இந்தியா கூட்டணியில் யார் வேட்பாளர் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை.. நாங்கள் தனியாக கூட்டணி கட்சிகளுடன் நிற்கிறோம்..
நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முடிவு எடுப்போம்.. நாடு முழுவதும் உள்ள இந்தியா கூட்டணியாலேயே யார் பிரதமர் வேட்பாளர் என்பதை அறிவிக்க முடியவில்லை.. நாங்கள் தனியாகத்தான் நிற்போம் என்று சாதித்துள்ளாரே (எடப்பாடி பழனிசாமி).. அப்புறம் அந்த முடிவில் மட்டும் எப்படி சமரசம் செய்து கொள்வார்.. இங்கு அதிமுக ஜெயிக்கிற பலம் இருக்கிறது அல்லவா? அது பேசும்.. அது பேசும் போது நம்ம சொல்வறங்க ஆட்சி பீடத்தில் அமருவார்கள்..
நான் இன்னொன்றும் சொல்றேன்... பாஜகவின் முழு மெஜாரிட்டிஇருக்கிறது இல்லையா.. அவர்கள் கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று இப்போது ஏன் சொல்கிறார்கள்.. வெள்ளத்தின் போது வரவில்லை.. ஒன்றும் செய்யவில்லை.. தமிழ்நாட்டிற்கான நிதி இருக்கு.. ஆனால் தர முடியாது என்று சொல்கிறார்கள்.. கேட்டால் அவர்கள் திருடுவாங்க என்று சொல்கிறார்கள்.. இது எந்தவிதத்தில் நியாயம்.. நீங்களே சொல்லுங்க.. உங்களுக்குத் தெரியும் நான் யாரை பற்றி பேசுகிறேன் என்று.. பாஜகவிற்கு இப்போது 400 சீட் வரும் என்கிறார்கள்.. ஏற்கனவே மெஜாரிட்டியுடன் தானே இருந்தது.. ஏன் பாஜக ஒன்றுமே செய்யவில்லை..
சீனாக்காரர்கள் வரவில்லையா.. பாகிஸ்தான் வரவில்லையா.. எல்லை பிரச்சனை முடிந்து போய்விட்டதா? எல்லையில் சீனா கிராமம் அமைக்கவில்லையா.. நம் நாட்டின் பொருளாதாரம் என்னாச்சு.. வேலைவாய்ப்பு என்னாச்சு.. இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.. உங்களுக்குத்தான் மெஜாரிட்டி இருக்குல்ல.. ஆர்டர்களை போடலாமே.. எதிர்க்கட்சிகளை பேசவிடுவதே இல்லை..
நாடாளுமன்றத்தையே மாற்றிவிட்டாங்க.. இந்தியாவை மாற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்.. இந்தியாவை நல்ல விதமாக மாற்றினால் பரவாயில்லை.. எதேச்சதிகாரம் வந்தால் என்ன பண்ணுவீங்க.. இந்தியா என்பது அமெரிக்காவை போல் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்.. இங்கு எதேச்சதிகாரம் வந்தால் எதிர்க்க வேண்டுமா.. வேண்டாமா? வெள்ளைக்கார்களை நாம் அனுப்பிவிட்டோம்..நம்ம ஊர்காரர்களை நாம் தேர்தல் மூலமாகவே வீட்டிற்கு அனுப்ப முடியும் " இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications