மாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்? சிபிசிஐடி மீண்டும் விசாரணை
Recommended Video
தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரை தேர்வு எழுதி வைத்து மோசடி செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர் இதில் ரூ.20லட்சத்தை புரோக்கரிடம் கொடுத்து மகனை மருத்துவராக்க மோசடியில் ஈடுபட்டதை வெங்கடேசன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உதித் சூர்யா கடிதம்
முன்னதாக இந்த விவகாரம் வெளியாகும் முன்பே தேனி மருத்துவக்கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை என மாணவர் உதித் சூர்யா தனக்கு விருப்பம் இல்லை என கடந்த 12ம் தேதி எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆவணங்களை மறைக்க முயற்சி
ஆனால் அதே தேதியில் அவர் வகுப்பறையில் பங்கேற்றதாக வருகை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பின்னர் அது அடிக்கப்பட்டு அவர் பங்கேற்காதது போன்று திருத்தமும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அதுபோல் சில ஆவணங்களை மறைக்க முயற்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆவணங்களை கைப்பற்றினர்
இது தொடர்பாக தேனி அரசு மருத்துக் கல்லூரியில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி சிபிசிஐடி போலீஸ் எஸ்பி விஜயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

மீண்டும் விசாரிக்க திட்டம்
அப்போது தான் வருகை பதிவேட்டை திருத்தியவிவகாரம் வெளியே தெரிந்தது. இந்நிலையில் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்? எதற்காக திருத்தப்பட்டது? என கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்களிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications