பஸ் ஸ்டாண்டில் ஓடிப்போன மனைவி, கள்ளக்காதலன்.. ரத்தம் தெறித்த போலீஸ் ஸ்டேசன்.. அரண்டு போன ஆண்டிப்பட்டி
தேனி: மனைவியை கூட்டிக்கொண்டு ஓடிய கள்ளக்காதலனை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் பார்த்த தொழிலாளி, அங்கேயே அவரை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவரது மனைவி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்த 40 வயதாகும் தீபாவளி, திருமணமாகி விவாகரத்து ஆனவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா (இப்போது அவருக்கு 27) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

அதே கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (40). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஈஸ்வரனுக்கும், தீபாவளியின் மனைவி சங்கீதாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டிக்கிறது. இதையறிந்த தீபாவளி, மனைவி சங்கீதா மற்றும் ஈஸ்வரன் ஆகிய 2 பேரையும் பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் தங்கள் கள்ளக்காதலை கைவிட மறுத்து, வழக்கம் போல் காதலை தொடர்ந்தார்களாம்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவும், ஈஸ்வரனும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்களாம். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு, மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் கள்ளக்காதல் ஜோடி தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்
இதனையடுத்து போலீசார், தீபாவளியை அழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார்க்ள். அப்போது தனது கணவருடன் வாழ பிடிக்கவில்லை என்று சங்கீதா போலீசில் கூறினாராம். இதற்கிடையே இந்த புகாரை, ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக மயிலாடும்பாறை போலீசார் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக விசாரணைக்கு நேற்று காலை 10 மணிக்கு ஆஜராகும்படி மகளிர் போலீசார் 3 பேருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்கள, கள்ளக்காதலனுடன் ஓடியது மட்டுமின்றி, தன்மீது புகார் கொடுத்ததால் தீபாவளி கடும் ஆத்திரம் அடைந்தார். அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வரும் வழியிலேயே ஈஸ்வரனையும், சங்கீதாவையும் காலி செய்ய ஸ்கெட்ச் போட்டார்.இதற்காக ஆண்டிப்பட்டி பஜாருக்கு சென்ற தீபாவளி, நேற்று காலை புதிதாக ஒரு கத்தியை விலைக்கு வாங்கி இருக்கிறார்.
பின்னர் ஆண்டிப்பட்டி பஸ்நிலையத்துக்கு வந்து, அவர்கள் வருகையை எதிர்பார்த்து முன்கூட்டியே வந்தார். காலை 10.30 மணி அளவில் ஈஸ்வரனும், சங்கீதாவும் ஒரு பஸ்சில் இருந்து ஆண்டிப்பட்டி பஸ்நிலையத்தில் ஜோடியாக வந்து இறங்கி இருக்கிறார்கள். இதனையடுத்து பக்கத்திலேயே இருந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் 2 பேரும் நடந்து சென்றனர். இதனைக்கண்ட தீபாவளி வேகவேகமாக பின்னால் சென்றார்.
ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரனையும், சங்கீதாவையும் சரமாரியாக குத்தினார். இதை பார்த்த பயணிகள் அலறி அடித்து ஓடி கலைந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் உயிர் பிழைப்பதற்காக ஈஸ்வரனும், சங்கீதாவும் அங்கிருந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் நோக்கி ஓடினர். இருப்பினும் அவர்களை பின்தொடர்ந்து ஓட, ஓட விரட்டி சென்று தீபாவளி கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதற்கிடையே ரத்தம் சொட்ட, சொட்ட கள்ளக்காதல் ஜோடியினர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வாசலுக்கே சென்று விட்டனர். சிறிதுநேரத்தில் அவர்கள் 2 பேரும் அங்கு மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த மகளிர் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஈஸ்வரனையும், சங்கீதாவையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கீதாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அவர்களை தாக்கிய கத்தியுடன், ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் தீபாவளி சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஓடிப்போன மனைவியை ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்திவிட்டு, கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications