தேர்தலில் உதயநிதி போட்டியா?.. ''அதுக்கு இது பதில் இல்லையே'' என்ற பாணியில் பதிலளித்த மு.க.ஸ்டாலின்!
தேனி: கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை. இது தொடர்பாக தவறான கருத்துக்களை பரப்பி விடுகின்றனர் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுகவை குறை சொல்பவர்கள்தான் குடும்ப அரசியல், உதயநிதிக்கு முன்னுரிமை என்று சொல்லி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

தேனி மாவட்டம் போடியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை. இது தொடர்பாக தவறான கருத்துக்களை பரப்பி விடுகின்றனர். கூட்டணி கட்சிகளை அவர்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பது எங்கள் கடமை என்று கூறினார்.
அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறாரா? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு ஆமாம் போட்டியிடுகிறார். இல்லை போட்டியிடவில்லை என்று நேரடியாக பதில் கூறாமல், அதுக்கு இது பதில் இல்லையே, என்ற பாணியில் மு.க.ஸ்டாலின் பதில் கூறினார்.
அப்போது கூறிய அவர், ''திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே அப்படித்தான் கட்சியில் வாய்ப்பை பெற்றேன். திமுகவை குறை சொல்பவர்கள்தான் குடும்ப அரசியல், உதயநிதிக்கு முன்னுரிமை என்று சொல்லி வருகின்றனர்'' என்று தெரிவித்தார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications