ஓசி பஸ்ல தான போறீங்க? பெண்களை நோக்கி ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் சொன்ன வார்த்தை.. சர்ச்சை!
தேனி: ‛‛நாங்க ஆட்சிக்கு வந்தாச்சுனா.. என்னென்ன சொன்னோம்.. மக்களே கஷ்டப்படாமல் 4 மணிவரை வேலை செய்யுங்கள். அதன்பிறகு ஓசியாக பஸ்சில் போங்க என்று சொன்னோம். இப்போ அதேமாதிரி போய் வறீங்களா?. இப்போது ரோடு போட்டு பஸ் விடப்போகிறோம். அதிலும் ஓசியாக தான் ஏறிப்போகப்போறீங்க'' என்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்தவுடன் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் முக்கியமான திட்டம் தான் ‛விடியல் பயண திட்டம்'. இந்த திட்டத்தின் மூலமாக அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும்.

இந்த ‛விடியல் பயணம்' திட்டத்தால் தமிழகத்தை சேர்ந்த பல லட்சம் பெண்கள் தினமும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் பஸ் கட்டணத்துக்கு தினமும் ஆகும் செலவை அவர்கள் மிச்சப்படுத்த இந்த திட்டம் உதவி வருகிறது.
இந்நிலையில் தான் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ மகாராஜன் ‛விடியல் பயணம்' திட்டம் தொடர்பாக பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக ஆண்டிபட்டியில் இன்று அவர் பேசும்போது, ‛‛நாங்க ஆட்சிக்கு வந்தாச்சினா.. என்னென்ன சொன்னோம்.. மக்களே கஷ்டப்படாமல் 4 மணிவரை வேலை செய்யுங்கள். அதன்பிறகு ஓசியாக பஸ்சில் போங்க.. தேனிக்கு போங்க.. ஆண்டிபட்டிக்கு போங்க.. உசிலம்பட்டிக்கு போங்க.. ஆம்பளை ஆளுங்க எல்லாம் வீட்டில் சோறாக்குங்கனு சொல்லிட்டு போனோம்.. இப்போ அதேமாதிரி போய் வறீங்களா?.
3 ஆண்டுகளாக எவ்வளவு வேலை நடந்து இருக்கு.. இப்போது இந்த ரோடு போடப்போகிறோம். இதில் பஸ் விடப்போகிறோம். அதிலும் ஓசியாக தான் ஏறிப்போகப்போறீங்க.. அன்னைக்கு என்ன சொல்ல போறீங்கனு தெரியலை'' என பேசியுள்ளார். திமுக எம்எல்ஏ மகாராஜனின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கட்டணமின்றி அரசு திட்டத்தில் பயணிக்கும் பெண்களை ‛ஓசி' என்று அவர் பேசியுள்ளதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, ‛‛ஓசி'' என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். மகளிருக்கான ‛விடியல் பயணம்' திட்டம் பற்றி அவர் மேடையில் பேசியபோது, ‛‛நீங்கள் எல்லாம் எப்படி பஸ்சில் போகிறீர்கள்.. ஓசி'' என்று பேசியது தொடர்பான வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பொன்முடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தனது வட்டார வழக்கில் இப்படி பேசிவிட்டதாக கூறி பொன்முடி வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும் பொன்முடியின் அந்த பேச்சு என்பது திமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து பொன்முடி சர்ச்சையில் சிக்கி வந்தநிலையில் தற்போது அவரிடம் இருந்து அமைச்சர் பொறுப்பு மற்றும் கட்சி பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் பறித்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், பெண்களுக்கான ‛விடியல் பயணம்' திட்டம் பற்றி ஓசி என்று கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications