மாயமான பூவரசன்.. இப்படி ஏமாந்துட்டோமே.. பாலத்தில் நின்றபடி அழுத கர்ப்பிணி.. ஓடி வந்து மீட்ட மக்கள்!
7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்ய முயற்சி செய்து கொண்டுள்ளார்
தேனி: இப்படி ஏமாந்துட்டோமே.. என்று புலம்பியபடி.. பாலத்தில் நின்றுகொண்டு ரொம்ப நேரமாக அழுது கொண்டே இருந்தார் 7 மாத கர்ப்பிணி பிரியங்கா.. இறுதியில் அணையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கே வந்துவிட்டார்!!
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது அணைப்பட்டி என்ற கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா என்ற 20 வயது பெண்.. பூவரசன் என்பவரை காதலித்தார்.. இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்!

வீட்டில் எப்படியும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்த காதலர்கள் 7 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டனர். இதில் பிரியங்கா கர்ப்பம் ஆனார்.. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பூவரசனை காணவில்லை.
பல இடங்களில் கணவனை தேடி அலைந்தார் பிரியங்கா.. ஆனால் கிடைக்கவே இல்லை என்பதால் விரக்தியின் உச்சத்துக்கே போய்விட்டார்.. சம்பவத்தன்று கூடலூர் அருகே உள்ள குறுவனத்து பாலத்திற்கு சென்றார்.. அந்த பாலத்தில் ரொம்ப நேரமாக நின்று கொண்டு அழுது கொண்டே இருந்துள்ளார். அப்போது முல்லை பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள தயாரானார்.
குதிக்க தயாராகும்போது, அக்கம்பக்கத்தினர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடிவந்து பிரியங்காவை தடுத்து நிறுத்தினர்.. பிறகு, லோயர்கேம்ப் போலீசாரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தனர். போலீசார் பிரியங்காவிடம் நடந்ததை விசாரிக்கும்போதுதான், எல்லா விஷயமும் தெரியவந்தது.
பூவரசன் எங்கே போய்விட்டார் என்பது தெரியாததால், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.7 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications