முளைப்பாரி திருவிழாவில் இரு தரப்பு மோதல்.. பாட்டி மண்டை உடைந்தது.. சங்கரன்கோவிலில்!
கோயில் திருவிழாவில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டதில் 5 பேர் கைதானார்கள்.
நெல்லை: கோயில் திருவிழாவில் இரு தரப்பினரும் மோதிக் கொண்ட விவகாரத்தில் பாட்டி ஒருவரின் மண்டை உடைந்தது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியல் நடைபெற்ற சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ளது வடக்குப் புதூர் கிராமம். இங்கு முத்துமாரியம்மன் கோயில் விழாவின் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது திடீரென்று ஒரு பிரிவினர் மீது மற்றொரு பிரிவினர் கல்வீசி தாக்க ஆரம்பித்தனர். இது கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கோஷ்டி மோதலாக உருவானது.

மண்டை உடைந்தது
இந்த மோதலில் இருளியம்மாள் என்ற பாட்டிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

5 பேர் கைது
பாட்டி மண்டை உடைந்து காயமானதால், ஒரு தரப்பினர் மேலும் ஆத்திரமுற்றனர். இதனால் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துவிட்டனர். இரு தரப்பை சேர்ந்த 20 பேர் மீது கேஸ் போட்டு, அதில் 5 பேரை உடனடியாக கைது செய்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை
இதனால் ஆத்திரம் அடைந்த இன்னொரு பிரிவினர், கைதான தங்கள் தரப்பு ஆட்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்லி முத்துமாரியம்மன் கோவில் முன்பே மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

போலீசார் குவிப்பு
ஆனால் இன்னமும் வடக்குப் புதூர் கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications